செய்யுளியல்

363குறளடி முதலா அளவடி காறும்
உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப.1

என்-னின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

குறளடிமுதலாக அளவடியளவும் வஞ்சியுரிச் சீர் வந்து உறழுநிலையில் இல்லடிகள் இயற்சீரும் ஆசிரியவுரிச் சீருமாம் என்றவாறு.

எனவே பதினைந்தெழுத்து முதலாக நெடிலடியினுங் கழிநெடிலடியினு மெய்யுறழப்பெறுவ2 தென்றவாறாம்.எடுத்தோத்துப் பெரும்பான்மை.அளவடிக்கண் வஞ்சியுரிச்சீர் மயங்குபவுளவேல் மேற்கொள்க.3

(52)

1. பொதுப்பெறக்.
2. (பாடம்) பெறா.
3. வெனக்கொள்க.