என் - னின். இனிக் கூறப்படுவாரை உணர்த்துவார் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பார் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு. ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க. பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன். பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன். (177)
1.பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். பாங்கன் என்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகிவருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (தொல். பொருள்.501. பேரா.)
|