செய்யுளியல்

523சித்திர வண்ணம்
நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே.
என் - னின் சித்திரவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சித்திரவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்துவரும் என்றவாறு.

"ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்."

(குறந். 231)

எனவரும்.

(210)