புறத்திணை இயல்

82குழவி மருங்கினும் கிழவ தாகும்.

இது, குழவிப் பருவத்தும் காமப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) குழவி மருங்கினும்1 கிழவது ஆகும் - குழவிப் பருவத்தும் காமப்பகுதி கூறல்பெறும் (அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்தியக்கண்.)

உதாரணம்

"வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண்ணி அஞ்சி அலற - எரிக்கதிர்வேல்
செங்கோலன் நுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலம் தீண்டல் இனிது."

(புறப்.பாடாண். 50)(24)

1. மருங்கு என்றதனால் மக்கட்குழவியாகிய ஒரு மருங்கே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும் அக் குழவிப் பருவமே கருதிப் பாடும் என்றற்குக் கிழவதாகும் என்றார்.

(தொல்.புறம். 29) (நச்சி.)