கற்பியல்

173எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார்.

இது தலைமகட் குரியதொரு மரபு உணர்த்திற்று.

நினைத்தற்கரிய பாசறைக்கண் தலைமகளிரோடும் புணரார் தலைமக்கள் என்றவாறு.

நினைத்தற்கருமை - மாற்றாரை வெல்லுங் கருத்து மேற்கோடலிற்றலை மகளிரை நினைக்கலாகாதாயிற்று. பாசறை என விசேடித்தவனால் ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க.

(34)