கற்பியல்

176எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
1புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.

இது வாயில்கட்குள்ளதொரு மரபு உணர்த்திற்று.

வாயில்கள் எல்லாம் இருவர் மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையுடைய என்றவாறு.

இருவராவார் தலைவனுந் தலைவியும். எனவே வெகுட்சிப் பொருண்மை கூறப்பெறார் என்றவாறு.

(37)

1. `புல்லிய' என்றதனான் விருந்தும் புதல்வரும் ஆற்றாமையும் வாயிலாகுப என்று கொள்க. (தொல். பொருள். 178. நச்சி)