இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எ நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஒரு நிலத்திற் குரிய பூவும் புள்ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அந் நிலத்தொடும் பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - வந்த நிலத்தின் பயத்த ஆகும். "வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு . 412) என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க; இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.1 (21)
1. "வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்" (தொல். சொல். 81) நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலம் என்றார். (நச்சி.)
|