என் - எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று. எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்திவரு விருப்பத்தையுடைத்து என்றவாறு. எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர் மாட்டும் இன்பமுள தாகும் எனவும், பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க. (27)
1. "மேவற்றாகும்" - ஆணும் பெண்ணும் என அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும். (தொல். பொருள். 223. நச்சி.)
|