(இ - ள்) மேற்பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றானன்றித் தத்தமரபில் தோன்றும் பொருளும் உளவாமென்றவாறு.
மன் ஆக்கங்குறித்துவந்தது. ஈண்டுமரபென்றது பயிற்சியை. இதனானே நூல் செய்கின்ற காலத்து வினைமுதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும்.
'முழவுறழ் தடக்கையி னியல வேந்தி' | (திருமுருகாற். 215) |
'மாவென்ற மடநோக்கின்' | (கலித். 57) |
'வேய்வென்ற தோள்' | (கலித்.138) |
'மாரிவீ ழிருங்கூந்தல்' | (கலித். 14) |
'பொன்னுரை கடுக்குந் திதலையர்' | (திருமுருகாற் . 145) |
'குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்' | (பெரும்பாண். 13) |
'செயலையந் தளிரேய்க்கு எழினலம்' | (கலித். 15) |
'பாஅன் மருண் மருப்பி னுரல்புரை பாவடி' | (கலித். 21) |
'வலம்புரி புரையும் வால்நரை முடியினர்' | (திருமுருகாற். 127) |
'ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல' | (அகம். 22) |
'தாமரைபோல் வாள்முகம்' | (திணைமாலை. 1) |
'காரவர்போ னோக்கினு நோக்கும்' | |
'ஒழுகு நோன்பக டொப்பக் குழீஇ' | (அகம்.35) |
எனவும் பிறவுமன்ன.