| என் - னின் எண்ணு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. எண்ணுப் பயின்றுவருவது எண்ணுவண்ணமாம் என்றவாறு. உதாரணம்"நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை." (பதிற்றுப். 14) எனவரும் .(216)
|