மரபியல்

632தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின் கண்ணே வருமென்றவாறு.

இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்புமில்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வகைப்பட்ட உறுப்புப்பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் என்றவாறு.

அவையாவன; வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன.

(88)