| இதுவுமது. நூற்குற்றம் உணர்த்துதல் நுதலிற்று. எதிர்மறுத்து உணர்வராயின், அத்திறத்தவும் குற்றமா மென்றவாறு. உதாரணம் பாவஞ் செய்தான் நிரையம்புகு மெனக் கருதிக் கூறுவான் தவஞ்செய்வான் சுவற்கம் புகுமென்றல். இவ்வாறு கூறிச் சுவற்கம் பெறுமென்னும் பொருட்...நிரையம்புகுமென்ற பொருள் தோன்றாமையிற் குற்றமாயிற்று. (111)
|