களவியல்71

அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்

காப்பின் கடுமை கையற வரினும்

களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்

காதல் மிகுதி உளப்படப் பிறவும்

நாடும் ஊரும் இல்லுங் குடியும்

பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி

அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ

அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்

ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்

பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்

அவள்விலங் குறினும் களம்பெறக் காட்டினும்

பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும்

முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப்

புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்

வரைவுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்

ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்படப்

பாங்குற வந்த நாலெட்டு வகையினும்

தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன

(24)
 

க - து :

களவின்கண்  தோழிகூற்று  நிகழுமிடமும்  அவை  நிகழுமாறும்
இவை என அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.
 

பொருள் :நாற்றமும்  தோற்றமும் ..... ....... பல்வேறு  கவர்  பொருள்
நாட்டத்தானும்   என்பது  :  தலைவனொடு  தலைவி  களவுப்புணர்ச்சியை
எதிரேற்றுக்   கொண்டமையை அகப்படுத்து  ஓர்வார்க்குப்  புலப்படவரும்
தலைவியது மெய்யின்கண், பண்டு  போலாது   தலைவனது   கூட்டத்தான்
நறுமணம்   விரவிக்கமழும்   நாற்றமும்,  பெதும்பைப்பருவத்து  வெள்ளை
நோக்கின்றிக்   கரந்து   நோக்கும்   பரந்த   விழிகளும்,   நிலைதிரிந்து
பணைத்துக்காட்டும்  தோளும்,  மார்பும்   பொற்புறத்திகழும்  தோற்றமும்,
பண்ணை  ஆயத்தொடு  கலந்து  விளையாடலில்  விருப்பமின்றிப்  பெண்
தன்மை விளங்க  ஒழுகும்  ஒழுகலாறும், பண்டுபோலாது   உணவுண்ணும்
வேட்கையின்றி   அளவிற்   குறைய   உண்ணும்  உண்டியும், புனலாடல்,
பூக்கொய்தல் முதலியவற்றைத் தோழியொடு புரியாது இடந்தலைப் பாட்டிற்கு
ஏதுவாக மறைவிடம்  நோக்கிச்  செல்லலுறும் செய்வினையும், எத்திசையும்,
ஆயத்தொடுகூடி  விளையாடுதலை  விலக்கி   ஒரு திசையையே நோக்கிச்
செல்லும்