72களவியல்

செலவும்,  செவிலியொடு  துயிலுதலை   விலக்கித்  தனித்து உறங்குதல்
முதலாய பயில்வும் ஆகிய  மனவுணர்வு ஏழானும்  புணர்ச்சி  உண்மையை
ஓர்ந்து   தெளிந்த     பின்னர்த்      தலைவியது    வாய்மொழியானும்
பிறகுறிப்புக்களானும்    உறுதிசெய்து     கோடற்    பொருட்டுத்  தனது
குற்றேவல்    முறைமை   பிழையாமல்  கவர்பொருள் பயக்கும் பல்வேறு
கிளவிகளான்   உண்மையாகவும்,    பொய்யாகவும்  உரையாடி ஆராய்தற்
கண்ணும் என்றவாறு.
 

தலைவனது கூட்டத்தான் மகளிரிடத்து நிகழும்  உணர்வும் செயலுமாகிய
வேறுபாடுகளுள் நாற்றம் முதலாகிய  இவ்  ஏழும்  சிறப்புடையவையாகலின்
"உணர்ச்சி ஏழினும் உணர்ந்த  பின்றை"  என  இவற்றை  எடுத்தோதினார். அவை  ஊன்றி நோக்குவார்க்கே   புலனாதலின்   உள்ளுறுத்து   வரூஉம்
உணர்ச்சி என்றார்,
 

எ - டு :

காம்பிவர் தோளும் கருமதர் மழைக்கணும்

வீங்கிள முலையும் வேறுபட் டனவே

தாங்கரும் நாற்றம் தலைத்தலை சிறந்து

பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற்

பகலுங் கங்குலும் அகலா தொழுகுமே

நன்றி யளவைத் தன்றிது

எவன்கொல் மற்றிவட் கெய்திய வாறே

(நச்-மேற்)
 

இதன்கண்   நாற்றமும்,   தோற்றமும்    செலவும்   வந்தன.   "பல்வேறு
கவர்பொருள்   நாட்டம்"    என்றதனான் நாணுமாறும் நடுங்குமாறும் கூறி
ஆராய்தலும் சிறுபான்மை ஆமெனக்கொள்க.
 

அவை,   பிறைதொழுவாம் எனவும், அம்புதைக்கப்பெற்றுப் புண்கூர்ந்த
மெய்யினதாய்ச்  சென்றயானை    ஒன்றினைக்    கண்டனென்   எனவும்
குருதிவழியும் கோட்டொடு யானை  ஒன்று சென்றமை கண்டெனன் எனவும்
மன்னவனொப்பான் ஒருவன் என்பாற்குறையுறுவனாய்  வந்து சொல்லாடாது
பெயர்ந்தான்   எனவும்,   புறத்தே என்னை ஒருவன் தழுவினானாக யான்
நேரே திரும்பி நோக்கியவழி  விதிர்ப்புற்று  அகன்றான்   எனவும் அவை போல்வன பிறவும் கூறி ஆராய்தலாம்.
 

எ - டு :

முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே

பின்னும் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும்