| பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் |
| பெருகொளியான் மிக்க பிறை. |
(நச்-மேற்) |
பையுள் மாலைப் பழுமரம் படரிய (நச்-மேற்) என்னும் அகப்பாட்டும் பிறவும் நாண நாட்டமாம். |
| பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுள் |
| கண்டிக் களிற்றை யறிவன்மன் - திண்டிக் |
| கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் |
| உதிரம் உடைத்ததன் கோடு |
(சிற்றட்டகம்) |
இது நடுங்க நாட்டம். |
நாண நாட்டமும் நடுங்க நாட்டமும் தலைவிக்கு ஏதம் பயப்பனவாதலின் ஏலா என்பார். ஒரு சாரார், வழிநிலை பிழையாது தலைவியது உளமறிந்து நகையாடி நயம்படக்கூறும் அறிவுடையாளாதலின் ஏற்கும் என்பார் ஒரு சாரார். ஏற்குமெனக் கோடலே நேரிது. இங்ஙனம் குறிப்பான் ஆராயும் வகை ஏழும் கூற்றான் ஆராயும் வகை ஒன்றுமாகிய இவ்எட்டும் தோழி மதியுடம்பாட்டுவகை மூன்றனுள் முன்னுறவுணர்தல் என்னும் கூறாகும். |
2) குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் என்பது : தோழி தனித்திருந்துழி அவளை இரந்து குறையுறற்கு முனைந்த தலைவனைத் தான் அறிந்திருந்தும் அறியாதாள்போல மறைத்து அவனது பெருமையை எடுத்துக் கூறி அவன் குறையுறுதலை மாற்றுதற்கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | தகைமாண் சிறப்பிற் சான்றோர்க் கொத்த |
| வகையமை வனப்பினை யாகலின் உலகமொடு |
| பாற்படற் பாலை மன்னோ காப்படுத்து |
| ஓங்குயர் அடுக்கத்துச் சாந்துவளர் நனந்தலை |
| நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர் |
| இன்ன ரென்னாது இன்பம் வெஃகிப் |
| பின்னிலை முயற்சியின் வருந்தினும் |
| நும்மோரன் னோர்க்குத் தகுவதோ வன்றே |
(நச்-மேற்) |
இவளே, கானம் நண்ணிய காமர் சிறுகுடி (நற்-45) என்னும் நற்றிணைச் செய்யுளும் அது. |
3) உலகுரைத்து ஒழிப்பினும் என்பது : தலைவனது பெருமையைக் கூறிப் பெயர்த்த வழித்தலைவன் தன்காதற் |