கேண்மையை வலியுறுத்தவிடத்து உலகத்தார் மகட்கொள்ளுமாறு முயன்று கொள்க என அவனது குறையைக் கேளாது நீக்கற்கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | கோடீர் எல்வளைக் கொழுமணிக் கூந்தல் |
| ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் |
| தென்கழிச் சேயிறாப் படூஉம் |
| தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ |
(ஐங்-196) |
4) அருமையின் அகற்சியும் என்பது : வரைந்து கோடல் பின்னர் ஆவதாக இஞ்ஞான்று தலைவியை அடைதல் வேண்டுமெனத் தன் ஆற்றாமையைக் கூறிய வழிக் குற்றேவல் தன்மையளாகிய யான் அவளை நெருங்கி இன்னோரன்ன கூறுதல் அருமைப்பாடுடையதாகலின் என்னான் இயலாதெனக்கூறி அகற்றுதற் கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை |
| புதுவை யாகலின் கிளத்தல் நாணி |
| நேரிறை வளைத்தோள்நின் தோழி செய்த |
| ஆருயிர் வருத்தங் களையா யோஎன |
| எற்குறை யுறுதிராயின், சொற்குறை |
| எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர் |
| கட்காண் கடவுள் அல்லளோ பெரும |
| ஆய்கோல் மிளகின் அமலையங் கொழுங்கொடி |
| துஞ்சுபுலி வரிம்புறம் தைவரும் |
| மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே. |
(இளம்-மேற்) |
5) அவளறி வுறுத்துப் பின்வா என்றலும் என்பது : அங்ஙனம் அகற்றிய வழியும் தலைவன் அகலாது பின்னும் வேண்டுமிடத்து, நீயே நின் ஆறாக் காதலை அவட்கு முற்பட அறிவித்துப் பின்னர் என்பால் வருக என்னுமிடத்தும் என்றவாறு. பின்வா என்றமையான் தலைவனது கையுறை மறுத்துக் கூறலும் இதனானே கொள்க. |
| எ - டு : | தன்னையும் தான்நாணும் சாயலாட் கீதுரைப்பின் |
| என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய |
| வேயேய்மென் றோளிக்கு வேறா யினியொருநாள் |
| நீயே உரைத்து விடு |
(இளம் - மேற்) |
இது நீயே உரை என்றது. |