களவியல்77

சோர்ந்த குருதி ஒழுகமற் றிப்புனத்திற்

போந்த திலையக் களிறு

(திணைமொழி - 8)
 

நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று

கடுங்களிறு காணீரோ என்றீர்-கொடுங்குழையார்

யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து

ஏனல் கிளிகடிகு வார்

(இளம் - மேற்)
 

ஏனல் காவல் இவளும் அல்லள்

மான்வழி வருகுவன் இவனும் அல்லன்

நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக்

கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே

நம்முன் நாணினர் போலத் தம்முள்

மதுமறைத் துண்டோர் மகிழ்ச்சி போல

உள்ளத் துள்ளே மகிழ்ப

சொல்லும் ஆடுப கண்ணி னானே

(இளம் - மேற்)
 

இது தோழி மதியுடம்பாட்டினுள் "இருவரும் உள்வழி அவன்வர  வுணர்தல்"
என்னும் வகையாம். இது தலைவன்  கூற்றினுள்  ஊரும் பேரும் கெடுதியும்
பிறவும் நீரிற் குறிப்பின்  நிரம்பக் கூறித்   தோழியைக்  குறையுறும்  பகுதி
என்ற கிளவிக்கியையத் தோழி மாட்டு நிகழும் கிளவியாம்.
 

இவை   பத்தும்    தோழி    மதியுடம்பாட்டிற்குரிய    கிளவிகளாம்.
மதியுடம்படுதற்கு    இவற்றுள்     ஒரு     வகையே  சாலும்.  எனினும்
மதியுடம்பாட்டின்   இலக்கண   மரபுகள்   யாவும்   விளங்க   இங்ஙனம்
விரித்தோதினார் என்க.
 

எனவே, இம்மூன்று  கூற்றானும்  தோழி  உணர்தல் வேண்டுமென்பதும்
இவை  இம்முறையே   நிகழ்தல்  வேண்டும்   என்பதும்  யாப்புறவில்லை
வேண்டும் வழி வேண்டியாங்கு நிகழுமெனக் கொள்க.
 

10) புணர்ந்தபின்   அவன்வயின்   வணங்கற்   கண்ணும்   என்பது :
முன்னுறவுணர்தல்  முதலியவற்றான்  அவர்தம்  களவு  நிலை தன்மனத்தே
பொருந்திய  பின்னர்த்  தலைவினிடத்தே  பணிந்தொழுகுதற்    கண்ணும்
என்றவாறு.   புணர்ந்தபின்  என்பது   தலைவன்   தலைவியது  புணர்ச்சி
உண்மையைத் தெளிந்த பின்னர் என்றவாறாம்.
 

எ - டு :

வாங்குகோல் நெல்லொடு என்னும் (குறிஞ்சிக்கலியுள்)

"நிரைவளை முன்கைஎன் தோழியை நோக்கிப்