பட்டருளிய வழி அதனைத் தலைவன்பால் சென்று விரும்பிக் கூறுமிடத்தும் என்றவாறு. அவ்வழிக் கூறப்பெறுவன : தலைவி கையுறை ஏற்றமை கூறலும் பகற்குறி - இரவுக்குறி நேர்ந்தமை கூறலும். குறியிடங் கூறலும் குறியிடத்துத் தலைவனது வரவு கூறலும் தலைவன் நீங்கிய வழித் தலைவியொடு கூறலும் பிறவுமாம். |
| எ - டு : | பொன்மலியு மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைகள் |
| என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் |
| கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தாள் |
| உண்கண்ணி வாடாள் உடன்று |
(திணை - நூற் - 21) |
| கடும்புலால் புன்னை கடியுந் துறைவ |
| படும்புலால் புட்கடிவான் புக்க - அடும்புலாந் |
| தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில் |
| ஏழைமா நோக்கி யிடம் |
(திணை - நூற் - 44) |
| இவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் |
| பெயர்பட விளங்கிய இளையரும் ஒலிப்பர் |
| கடலாடு வியலணிப் பொலிந்த நறுத்தழை |
| திதலை யல்குல் நலம்பா ராட்டிய |
| வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் |
| நிறைபட ஓங்கிய முழவுமுதற் புன்னை |
| மாவரை மறைகம் வம்மதி பானாட் |
| பூவிரி கானற் புணர்குறி வந்துறும் |
| மெல்லிணர் நறும் பொழிற் காணா |
| வல்ல லரும்படர் காண்கம் நாம்சிறிதே |
(நற் - 307) |
புணர்ந்தோர் புண்கண் அருளலும் (அகம்-108) என்பது அது. |
இனி நயம் புரிதற்கண் தலைவன் சிலவற்றை மறைத்தலை நோக்கி என்னை மறைத்தல் எவனாகியர் என்றலும், அறியாள் போன்று குறியாள் கூறலும், படைத்து மொழிதலும், குறிப்பு வேறு கொளலும் பிறவுமாகத் தோழி கூறுவனவெல்லாவற்றையும் இதுவே இடமாக முடித்துக் கொள்க. |
| எ - டு : | நிறைத்திங்கள் சேர்ந்தோடும் நீண்மலை நாட |
| மறைக்கப் படாதேனை மன்னும்-மறைத்துக்கொண்டு |
| ஓடினாய் ஆதலால் ஒண்டொடியாள் தன்பக்கம் |
| கூடக் கிடந்ததொன் றில் |
(நச் - மேற்) |