82களவியல்
எ - டு :

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே 

இரைதேர் வெண்குரு கல்லது யாவதும் 
துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங் 
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் 
ஆண்டும் வருகுவள் பெரும்பேதையே  

(குறு-113)
 

இது பகற்குறி நேர்ந்து இடஞ்சுட்டியது.
 

சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் 
மால்வரை மறைய துறைபுலம் பின்றே 
இறவருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு 
வெண்கோட் டருஞ்சிறைத் தாஅய் கரைய 
கருங்கோட்டுப் புன்னை இறைகொண்டனவே 
கணைக்கால் மாமலர் கரப்ப மல்குகழித் 
துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை 
எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ 
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் 
தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர் 
முழவிசைப் புணரி எழுதரும் 
உடைகடற் படப்பைஎம் உறைவி னூர்க்கே 

(நற்-67)
 

இஃது இரவுக்கறி உடன்பட்டுக் கூறியது.
 

செறுவார்க் குவகை யாகத் தெறுவர 
ஈங்கும் வருபவோ தேம்பாய் துறைவ 
சிறநா வெண்மணி விளிரி யார்ப்பக் 
கடுமா நெடுந்தேர் நேமி போகிய 
இருங்கழி நெய்தல் போல 
வருந்தினள் அளியள்நீ பிரிந்திசி னோளே
 

(குறு-336)
 

இது இரவுக்குறி நயந்தானைத் தோழி மறுத்துக் கூறியது.
 

கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட 
அடற்கானல் புன்னைதாழ்ந் தாற்ற-மடற்கானல் 
அன்றி லகவும் அணிநெடும் பெண்ணைத்தே 
முன்றில் இளமணல்மேய் மொய்த்து 

(திணை-நூற்-56)
 

இஃது இரவுக்குறி இடங்காட்டிக் கூறியது.
 

சுறவுப் பிறழிருங்கழி நீந்தி வைகலும் 
இரவுக்குறிக் கொண்கன் வந்தனன் 
விரவும் மணிநெடும்பூண் விளங்கிழை யோயே  

(சிற்றட்டகம்)
 

இது குறியிடத்துத் தலைவன் வந்தமையைத் தலைவிக்குக் கூறியது.