| எ - டு : | கௌவையம் பெரும்பழி தூற்ற நாணழிந்து |
| பைதலஞ் சிறுநுதல் பசலை பாய |
| நம்மிகற் படுத்த அவரினும் அவர்நாட்டுக் |
| குன்றங் கொடியகொல் தோழி |
| ஒன்றுந் தோன்றா மழைமறைந் தனவே |
| (நச்-மேற்) |
இஃது இயற்பழித்தல் |
| மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ |
| அழியல் வாழி தோழி நன்னன் |
| நறுமா கொன்று நாட்டிற் போக்கிய |
| ஒன்றுமொழிக் கோசர் போல |
| வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே |
| (குறு-73) |
இஃது வற்புறுத்தது. |
| அழியல் ஆயிழை! அன்புபெரி துடையன் |
| பழியும் அஞ்சும் பயமலை நாடன் |
| நில்லா மையே நிலையிற் றாகலின் |
| நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
| கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத் |
| தங்குதற் குரிய தன்றுநின் |
| அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே |
| (குறு-143) |
இஃது ஆற்றுவித்தது. |
21) ஆற்றது தீமை அறிவுறுகலக்கமும் என்பது : தலைவன் குறியிடத்திற்கு வருகின்ற நெறியின்கண் உள்ள தீமைகளை அறிந்துள்ளமையான் கலங்குதற்கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே |
| உருகெழு மரபின் குறிஞ்சி பாடி |
| கடியுடை வியன்நகர் கானவர் துஞ்சார் |
| வயக்களிறு பொருத வாள்வரி உழுவை |
| கல்முகைச் சிலம்பிற் குழுமும் அன்னோ |
| மென்றோள் மெலிந்துநாம் வருந்தினும் இன்றவர் |
| வாரா ராயினோ நன்றுமன் தில்ல |
| உயர்வரை யடுக்கத்து ஒளிறுபு மின்னி |
| பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள் |
| திருமணி அரவுத்தேர்ந் துழல |
| உருமுச் சிவந்தெறியும் ஓங்குவரை யாறே |
| (நற்-255) |
22) காப்பின் கடுமை கையற வரினும் என்பது : கடமையான் நற்றாயும் செவிலியும் தலைவியைக் காவல் செய்தல் மிக்கவிடத்தும் என்றவாறு. |