86களவியல்
எ - டு :

கடலுடன் ஆடியும் கானல் அல்கியும் 

தொடலை ஆயமொடு தழூஉவணி யயர்ந்தும் 

நொதுமலர் போலக் கதுமென வந்தும் 

முயங்கினன் செலினே அலர்ந்தன்று மன்னே 

துத்திப் பாந்தள் பைத்தகல் அல்குல் 

திருந்திழைத் துயல்வுக் கோட்டசைத்த பசுங்குழைத் 

தழையினும் உழையிற் போகான் 

தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே  

(குறு-294)
 

பிறவும் வேறுபட வருவனவும் இதன்பாற் படுத்துக் கொள்க.
 

23, 24) களனும்  பொழுதும்   வரைநிலை  விலக்கிக்   காதல்  மிகுதி
உளப்படப்  பிறவும்,   நாடும்   ஊரும்   இல்லும்   குடியும்    பிறப்பும்
சிறப்பும்  இறப்ப   நோக்கி    அவன்வயிற்  றோன்றிய     கிளவியொடு
தொகைஇ அனைநிலை வகையான் வரைதல்   வேண்டினும்  என்பது : தம்
காதல் மிகுதி புலப்படாமல் நெஞ்சகப்படுத்து   இருவகைக்    களத்தையும்
காலத்தையும்   தாம்     வரைந்து   சுட்டுதலைத்   தவிர்க்கும் கிளவியும்,
பிறவாறு வரும் கிளவியும் தலைவனது நாடும்,   வாழும்  ஊரும், உறையும்
மனையும்,     குடிமையும்.   குலமும்.     செல்வம் முதலாய    சிறப்பும்,
பிறரினும் மிகுதிப்பட     நோக்கிக்     கூறிய    கிளவியொடு    கூட்டி
அத்தன்மைத்தாய   நிலைமையின்    கூறுபாட்டானே வரைந்து கோடலை
விரும்பிய இடத்தும் என்றவாறு.
 

இவ் இருகிளவிகளும்      வரைதல்   வேட்கைப்பற்றி     நிகழ்தலின்
ஒருங்குவைத்து உரைகூறப்பெற்றது.
 

'பகற்புணர் களனே புறனென   மொழிப' 'இரவுக்    குறியே  இல்லகத்
துள்ளும் மனையோர்   கிளவி கேட்கும்வழி யதுவே' எனக்  கூறுமாற்றான்
களனும்பொழுதும் இரண்டு இரண்டு  கூறுபாடு   படுமாறு   கண்டுகொள்க.
'குடியும் பிறப்பும்' என்பவற்றிற்கு விளக்கம்    "பிறப்பே குடிமை" என்னும்
மெய்ப்பாட்டியற் சூத்திரவுரையுட் கண்டுகொள்க.
 

எ - டு :

புன்னை காத்தும் அன்னம் ஓப்பியும் 

பனியிருங் கானல் யாம்விளை யாட 

மல்லலம் பேரூர் மறுகில் 

நல்கலும் ஓவா தலரா கின்றே 

(நச்-மேற்)
 

இதுபகற்குறி விலக்கியது. 
 

நெடுமலை நன்னாட நின்வேல் துணையாக் 

கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிருள்