களவியல்87

இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள் 

       

என்னாவாள் என்னுமென் நெஞ்சு. 

(ஐந்-ஐம்-19)
 

இஃது இரவுக்குறி விலக்கியது.
 

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் 

சாரல் நாட செவ்வியை யாகுமதி 

யாரஃ தறிந்தி சினோரே சாரல் 

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்குஇவள் 

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே  

(குறு-18)
 

இது  காதல்  மிகுதி   கூறியது.  பிறவும்   என்றதனான் தலைவனைப்
பழித்துக் கூறுதல் முதலாயவை கொள்க.
 

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை 

தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட 

வல்லைமன் றம்ம பொய்த்தல் 

வல்லாய் மன்றநீ அல்லது செயலே 

(ஐங்-287)
 

இது தலைவனைப் பழித்தது.
 

குன்றக் குறவன் காதல் மடமகள் 

மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல 

பைம்புறப் படுகிளி ஓப்பலர் 

புன்புல மயக்கத்து விளைந்தன திணையே 

(ஐங்-260)
 

இது புனங்காவல் இனி இன்றென்றது. 
 

வெறிகமழ் வெற்பன் மெய்ந்நீர்மை கொண்டது 

அறியாள் மற்றன்னோ அணங்கணங்கிற் றென்று 

மறியீர்ந் துதிரந்தூய் வேலற் றறீஇ 

வெறியோ டலம்வரும் யாய் 

(ஐந்-ஐம்-20)
 

இது வெறி அச்சுறுத்தியது. 
 

இனமீ னிருங்கழி ஓதம் உலாவ 

மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ 

குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம் 

நினைநீர்மை இல்லா ஒழிவு 

(திணை-ஐம்-44)
 

இஃது அருளல் வேண்டுமென்றது. 
 

"கோழிலை       வாழைக்   கோண்மிகு   பெருங்குலை"    என்னும்
அகப்பாட்டினுள் (அகம்-2) "பல்வேறு     விலங்கும்    எய்தும் நாட" என
அந்நாட்டினை இறப்பக்கூறி, அந்நாடுடைமையின்