88களவியல்

"குறித்த இன்பம் நினக்கெவன் அரிய"   என   வரைதல் வேண்டியவாறும்,
வேங்கை      விரிந்ததனான்     தினை    யறுத்தலின்    இற்செறிப்புக்
கூறியவாறும்;   'கங்குல் வருதலும்   உரியை'   எனப் பகற்குறி மறுப்பாள்
போலக்கூறி 'நெடுவெண் டிங்களும்  ஊர்கொண்   டன்றே'   என்றதனான்
இரவுக்குறியும் மறுத்து   வரைதற்கு   நல்ல   நாள் எனச்சொல்லி வரைவு
கடாயவாறும் காண்க.
 

'துணைபுணர்ந் தெழுதரும்' என்னும் நெய்தற்கலியுள்
 

(135)
 

கடிமலர்ப் புன்னைக்கீழ் காரிகை தோற்றாளைத் 

       

தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயால் மற்றுநின் 

குடிமைக்கண் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ 

ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்றாளை 

நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின் 

வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ 

...   ...   ...   ...   ...   ...   ...   ...   ... 

புகழ்மைக்கண் பெரியதோர் புகராகிக் கிடவாதோ'
 

என ஒழுக்கமும் வாய்மையும் புகழும் ஆகிய சிறப்புக்களைக் கூறியவாறு
காண்க. ஏனையவும்    சான்றோர்   செய்யுளுள் கண்டு  கொள்க. வரைவு
கடாதற்      பொருட்டாகப்   பிறவாறு   வருவனவெல்லாம்   இதன்கண்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.
 

25) ஐயச்செய்கை   தாய்க்கெதிர்   மறுத்துப்    பொய்யென    மாற்றி
மெய்வழிக்  கொடுப்பினும்   என்பது   தலைவிக்கு   யாழோர்   கூட்டம்
உண்டுகொல்   எனத்   தாய்   ஐயுற்று   ஆராய  முற்பட்டவழி அதனை
எதிர்மறுத்துப்  பொய்   எனக்கருதும்படி   அவள்  ஐயத்தை    மாற்றிப்
பிறிதோராற்றான்   அவள்  மெய்ம்மையை   உணர்ந்து   கொள்ளற்குரிய
சொற்களை உளங்கொளக் கொடுத்தற்கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

உருமுரறு கருவிய பெருமழை தழைஇப் 

பெயலான் றவிந்த தூங்கிருள் நடுநாள் 

மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப் 

பின்னுவடு நெறியிற் கிளைஇய கூந்தலள் 

வரையிழி மயிலின் ஒல்குவன ளொதுங்கி 

மிடையூர்பு இழியக் கண்டனென் இவளென 

அலையல் வாழிவேண் டன்னை நம் படப்பைச் 

சூருடைச் சிலம்பிற் சுடர்பூ வேய்ந்து

தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே 

நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 

கனவாண்டு மருட்டலும் உண்டே, இவள்தான்