களவியல்93

பிறவாறு  வருவனவெல்லாம்  இவற்றுள்  அடங்குமென்பார்  நாலெட்டு
என்னாது    நாலெட்டுவகையும்  என்றார்.  ஒன்றித்  தோன்றும்   தோழி
என்பது விளங்கத் தாங்கருஞ்சிறப்பின் தோழி என்றார்.
  

சூ. 117 :

களவல ராயினும் காமம்மெய்ப் படுப்பினும் 

அளவுமிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும் 

கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் 

ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் 

ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் 

காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் 

தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் 

போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் 

கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் 

பிரிவின் எச்சத்தும் மகள்நெஞ்சு வலிப்பினும் 

இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் 

இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு 

அன்னவை பிறவும் செவிலி மேன (25)
 

க - து :

களவின்கண்   செவிலி  தானே  கூறுவனவாயும்  தலைவியும்
தோழியும்    கொண்டெடுத்துக்    கூறுவனவாயும்    வரும்
செவிலிக்குரிய கூற்று வகையாமாறு கூறுகின்றது.
 

பொருள்:1.    களவு      அலராயினும்    என்பது :  தலைவியது
களவொழுக்கம்  அயலார்க்குப்  புலனாய்   அலர்   தூற்றப்படுமிடத்தும்
என்றவாறு.
 

எ - டு :

பாவடி யுரல பகுவாய் வள்ளை 

ஏதில் மாக்கள் நுவல்தலும் நுவல்ப 

அழிவ தெவன்கொல்இப் பேதை யூர்க்கே 

பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் 

கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய 

நல்லியற் பாவை யன்னவென் 

மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே

(குறு-89)
 

இது செவிலி தானே கூறியது.
 

அம்ம வாழி தோழி நென்னல் 

ஓங்குதிரை வெண்மணல் உடைக்குந் துறைவற்கு 

ஊரார் பெண்டென மொழிய என்னை