| அதுகேட்டு அன்னாய், என்றனள் அன்னை |
| | பைபைய எம்மை என்றனென் யானே |
| (ஐங்-113) |
இது செவிலிகூற்றைத் தலைவி கொண்டு கூறியது. |
2) காமம் மெய்ப்படுப்பினும் என்பது : தலைவி மறைத்தொழுகினும் கூட்டத்தான் விளைந்த பொலிவு அவளது மெய்யின்கண் விளங்கக் காணுமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | மணியிற் றிகழ்தரும் நூல்போல் மடந்தை |
| அணியிற் றிகழ்வதொன் றுண்டு |
| (குறள்-1273) |
இது செவிலிதானே கூறியது. |
3. அளவுமிகத் தோன்றினும் என்பது : தலைவியது தோற்றமும் செய்கையும் பெதும்பைப் பருவத்து இயல்பினைக் கடந்து பெண்மைத் தன்மை மிக்குக் காணப்படுதற்கண்ணும் என்றவாறு. |
அஃதாவது கண்ணும் முலையும் தோளும் கதிர்ப்புற்று விளங்குதலும், பேச்சும் விளையாட்டும் அருகிக் காணப்படுதலுமாம். |
| எ - டு : | கண்ணிறைந்த காரிகை காம்பேர்தொட் பேதைக்குப் |
| பெண்ணிறைந்த நீர்மை பெரிது. |
| (குறள்-1272) |
4) தலைப்பெய்து காணினும் என்பது : களத்தை நோக்கி வந்த தலைவனைத் தற்செயலாக எதிர்பட்டுக் காண நேரினும் குறியிடத்துச் சென்று மீளும் தலைவியை அவ்வாறே காண நேரினும் அதுபற்றி எண்ணுமிடத்தும் என்றவாறு. தலைப்பெய்தல் = ஓரிடத்து எதிர்ப்படுதல். |
| எ - டு : | இரும்புலி தொலைத்த |
(அகம் - 272) |
| என்னும் அகப்பாட்டினுள் |
| குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் |
| மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு |
| முருகென உணர்ந்து முகமன் கூறி |
| உருவச் செந்தினை நீரொடு தூஉய் |
| நெடுவேட் பரவும் அன்னை" எனவும் |
உருமுரறு கருவிய (அகம்-158) என்னும் அகப்பாட்டினுள் |
| "மிடையூர் பிழியக் கண்டனென் இவளென |
| அலையல் வாழிவேண் டன்னை" |
எனவும் தோழி கொண்டுகூறினமை காண்க. |