களவியல்95

5. கட்டினும்    கழங்கினும்    வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற்
செய்திக்   கண்ணும்   என்பது:  கட்டுக்     கண்டதனானும் கழங்கிட்டுப்
பார்த்ததனானும் தலைவியது வேறுபாடு வேலனான் எய்தியது எனத் தானும்
நற்றாயும்   ஒன்றுபட்ட   கருத்தானே    வெறியாட்டெடுத்தலைச் செய்யும்
செயலின் கண்ணும் என்றவாறு.
 

'தாய்க்கும் வரையார்  உணர்வுடம் படினே' என மேற்கூறலான் இருவர்
என்றது செவிலியும் நற்றாயும் என்பது போதரும்.
 

எ - டு :

பெய்ம்மணல் முற்றங் கவின்பெற இயற்றி 

மலைவான் கோட்ட சினைஇய வேலன் 

கழங்கினான் அறிகுவ தென்றால் 

நன்றா லம்ம நின்றவிவள் நலனே 

(ஐங்-248)
 

இது வேலன் கழங்குபார்த்தமை கூறியது.
 

அறியா மையின் வெறியென மயங்கி 

அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனான் 

எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் 

ஆய்மலர் உண்கண் பசப்பச் 

சேய்மலை நாடன் செய்த நோயே  

(ஐங்-242)
 

இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. "அணங்குடை நெடுவரை"
என்னும்    அகப்பாட்டினுள் (22)   கட்டுப்    பார்த்தல்  கூறிற்று. கண்டு
கொள்க.
 

6) ஆடிய சென்றுழி அழிவுதலை   வரினும் என்பது : அங்ஙனம் அவர்
வெறியாட்டெடுத்தலை   மேற்கொண்டவழி அதற்கு (தோழியான்) இடையூறு
நேர்ந்த விடத்தும் என்றவாறு.
 

முருகயர்ந்து வந்த முதுவாய் வேல 

சினவல் ஓம்புமதி வினவது உடையேன் 

பல்வேறு உருவின் சில்லவிழ் மடையொடு 

சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி 

வணங்கினை கொடுத்தி யாயின், அணங்கிய 

விண்தோய் மாமலைச் சிலம்பன் 

ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே
  

(குறு-362)
 

என்றாற் போலத் தோழி  வெறி     விலக்குதலை    அழிவுதலை வருதல்
என்றார். செவிலி கூற்று வந்துழிக் கண்டுகொள்க.