களவியல்97

நலம் பயத்தலை   விரும்பி   அதுகூடுதற்    பொருட்டுத்  தெய்வத்தைப்
பராவி வாழ்த்துமிடத்தும் என்றவாறு.
 

எ - டு : 

பெருமலைச் சிலம்பின்; என்னும் அகப்பாட்டினுள் 

(282)

"வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 

இன்றீம் பலவின் ஏர்கெழு செல்வத்து 

எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர்வாய் 

அம்பல் ஊரும் அவனொடு மொழியும் 

சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி 

யாயும் அவனே என்னும் யாமும் 

வல்லே கவருக வரைந்த நாள்என 

நல்லிறை மெல்விரல் கூப்பி 

இல்லுறை கடவுட்கு ஒக்குதும் பலியே"
  

எனப் பராவியவாறு கண்டுகொள்க.
  

10)  போக்குடன்  கழிந்தபின்    தோழியொடு    கெழீஇக்    கற்பின்
ஆக்கத்து   நிற்றற்  கண்ணும்   என்பது :   தலைவனொடு      தலைவி
உடன்போக்குற்றமை   யறிந்து    தோழியின்      கருத்தொடு    தானும்
ஒன்றுபட்டுத்   தலைவி    மேற்கொண்ட   கற்பினது    ஆக்கத்தின்கண்
உவப்புற்று   நிற்குமிடத்தும்   என்றவாறு.   தலைவன்    உடன்போக்குக்
கற்பிற்கு ஆக்கமாதலின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் என்றார்.
 

எ - டு :

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு 

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய 

நாலுர்க் கோசர் நன்மொழி போல 

வாயா கின்றே தோழி ஆய்கழல் 

சேயிலை வெள்வேல் விடலையொடு 

தொகுவளை முன்கை மடந்தை நட்பே  

(குறு-15)
 

நட்பு   வாயாகின்று   எனத்   தலைவியின்   கற்பினாக்கங் கூறிச் செவிலி
உவந்தவாறு கண்டு கொள்க.
 

11) பிரிவின் எச்சத்தும் என்பது  : தலைவி     உடன்  பாக்குற்றவழித்
தேடிப்  பின்  செல்லுதலைத் தவிர்ந்து வருந்துமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று 

காடுபடு தீயின் கனலியர் மாதோ 

நல்வினை நெடுநகர்க் கல்லெனக் கலங்க 

பூப்புரை உண்கண் மடவரற் 

போக்கிப் புணர்த்த அறனில் பாலே 

(ஐங்-376)