12) மகள் நெஞ்சுவலிப்பினும் என்பது : தலைவி தலைவன்வழி ஒழுகற்கு அவள் உள்ளம் உறுதி பூண்டுள்ள நிலையினை உணர்ந்தவிடத்தும் என்றவாறு. (வலித்தல் = திண்ணிதாதல் - உறுதியுறுதல்) |
| எ - டு : | தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் |
| இனிதாம் கொல்லோ தனக்கே பனிவரை |
| இனக்களிறு வழங்கும் சோலை |
| வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே |
| (ஐங்-379) |
13. இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் என்பது : தலைவன் தலைவியது குடிமரபு முதலாய பொருள்கள் அமைந்துள்ள இயல்பினைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
பொருள் என்றது செல்வம், சீர்த்தி, குணம், தொழில் முதலியவற்றை. அவை ஒத்துள்ள வழி உவப்பும், முரண்பட்ட வழிக் கலக்கமும் எய்துதலின் கூற்று நிகழ்த்தற்கு அவை காரணமாயின என்க. |
எ - டு : "காமர் கடும்புனல்" என்னும் குறிஞ்சிக்கலியுள் (39) இருவர்தம் குடிப்பிறப்பு முதலாயவை ஒத்துள்ளமை கூறி அறத்தொடுநின்றமை கண்டு கொள்க. |
இன்னவகையிற் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவும் செவிலிமேன என்பது : இவ்வாறு வகைப்பட்டுவரும் பதின்மூன்று கிளவிகளும் அவைபோல்வனவாக வரும்பிற கிளவிகளும் செவிலியின் பாலவாம் என்றவாறு. அன்னபிற என்றவற்றுள் சில வருமாறு. |
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் (அகம். 122-4) சிறுகிளிகடிதல் தேற்றாள் இவள் (அகம். 28-12) எனவரும். |
சூ. 118 : | தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே |
| (26) |
க - து : | மேல் செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் நற்றாய்க்கு உரியவாமாறு கூறுகின்றது. |
பொருள் : தலைவியை உற்றுநோக்கி அவளது ஒழுகலாற்றினைச் செவிலி உணர்ந்தாங்கு நற்றாயும் ஆராய்ந்து மதியுடம்படுவாளாயின் செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் உரியவாகக் கோடலை நீக்கார் நூலோர். |
நற்றாய் மனையறம் பேணும் கடப்பாட்டினளாதலின் செவிலிபோல உற்றுநோக்கி யுணர்தல் அருமைத்தாகலின் |