களவியல்101

எனவே  பாங்கனால்    இடந்தலைப்படலும்      பாங்கி இடை நின்று
கூட்டுதலுமாகிய பாங்கர்கூட்டம் நிகழாமலேயே இடந்தலைப்  பாட்டின்பின்
வரைந்து கோடலும் உண்டென்பது இதனாற் புலப்படும்.
     

சூ. 122 :

அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் 

களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் 

தான்செலற் குரியவழி யாக லான  

 

க - து :

தாமே தூதுவராகுமிடத்துத் தலைவிக்குரியதோர் இலக்கணம்
கூறுகின்றது.
 

பொருள் :தலைவன் உறையும்      எல்லைக்கண்   சென்று சேர்தல்
களவின்கண் தலைவிக்கு அறநெறியின்மையான்   கூட்டத்திற்குரிய   களம்
(குறியிடம்)   குறித்துக்   கூறுதல்   தலைவியின்கண்ணதாகும்.    காரணம்
அக்களம் தான் செல்லுதற்குப் பயின்றமைந்த வழி ஆகலான்.
 

"விரியிணர்  வேங்கை"  என்னும்  அகப்பாட்டுள்  "கூஉம் கண்ணதுஎம்
ஊர்என ஆங்கதை அறிவுறல்   மறந்திசின் யானே"  எனக்   களஞ்சுட்டும்
தன் உரிமையைப் புலப்படுத்தியவாறு கண்டுகொள்க.
 

சூ. 123 :

தோழியின் முடியும் இடனுமா ருண்டே 
(31)
  

க - து :
  

களஞ்சுட்டுதல் தோழிக்கு முரித்தாகும் என்கின்றது.
 

பொருள் : தாமே தூதுவராம் நிலை கடந்த தோழியிற் புணர்வின்கண்
களஞ்சுட்டுதல் தோழியின் முடிதலும் உண்டு.
 

இடம் என்றது   பாங்கியாற்  கூடும்   கூட்டத்தை  உணர்த்தி நின்றது.
உம்மையான்  தோழியிற்   புணர்வின்கண்ணும்   தலைவி  இடஞ்சுட்டுதல்
உண்டென்பது பெறப்படும்.
 

எ - டு :
  

"செவ்வீ ஞாழற் கருங்கோட் டிருஞ்சினை"
 

என்னும் அகப்பாட்டினுள் (240) . . . . வண்டுபட
 

விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப் 

பூவேய் புன்னையந் தண்பொழில் 

வாவே தெய்ய  மணந்தனை  செலற்கே;
 

எனத்தோழி களஞ்சுட்டியவாறு காண்க.