அதர்ப்பட நாடுதலாவது : அஞ்சியச்சுறுத்தலும் சேட்படுத்தலும் முதலாகத் தலைவனது காதலைப் பெருக்கி அவன் வரைதலை மேற்கொள்ள ஆவன செய்தலும், அவ்வகை பிறவுமாம். |
| சூ. 132 : | குறியெனப் படுவது இரவினும் பகலினும் |
| அறியக் கிளந்த ஆற்றது என்ப. |
(40) |
| க - து : | பாங்கியிற் கூட்டத்திற்குப் பொழுதும் இடமும் ஆமாறு கூறுகின்றது. |
பொருள் : தலைவனும் தலைவியும் பாங்கியாற்கூடும் கூட்டம் நிகழ்தற்குரிய குறியிடம் எனச் சிறப்பித்துக் கூறப்படுவது இரவுக்காலத்தும் பகற்காலத்தும் தலைவி சென்று சேரற்கும் தலைவன் வந்து சேரற்கும் வாய்ப்பான, அவர் நன்கு அறியுமாறு சொல்லப்பட்ட நெறியினையுடையது எனக் கூறுவர் நூலோர். |
குறி என்றது குறிக்கப்படும் இடத்தை. அறியக் கிளந்த என்றது : முன்னர்த் தலைவியும் தோழியும் களஞ்சுட்டிக் கூறுவர் என்ற இலக்கணத்தான் கிளக்கப்பட்ட இடம் என்றவாறு. 'இரவினும் பகலினும்' என்றதனான் அம்முறைமையான் பொழுதும், இடமும் இருவகையாகக் கூறப்படும் என்க. அஃதாவது இரவுக்குறி - பகற்குறி எனக் கூறப்படும். |
| சூ. 133 : | இரவுக் குறியே இல்லகத் துள்ளும் |
| மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே |
| மனையகம் புகாஅக் காலை யான |
(41)
|
| க - து : | இரவுக்குறி நிகழும் இடமாமாறு கூறுகின்றது. |
பொருள் : இரவுக்குறி நிகழும் களமாவது இல்லத்தினது அகப்பாட்டெல்லையுள்ளும், மனையகத்திற் புகுதற்கு ஆகாத போழ்தின்கண் மனையினுள்ளார் பேசும் கிளவிகள் தம் செவியுறக் கேட்கும் புறப்பாட்டெல்லையுள்ளும் ஆகும் என்ப. |
மனையகம் புகாக்காலை என்றதனான் 'இல்லகம்' என்றது மனைக்கும் மனையைச் சூழ்ந்த எயிலுக்கும் (வேலி) இடைப்பட்ட உள்ளிடம் என்பதும் 'மனையோர் கிளவி கேட்கும் வழியது' என்றதனான் எயிலின் புறத்தாகிய இடம் என்பதும் புலப்படும். அஃதாவது இரவுக்குறி மனையைச் சூழ்ந்த எயிலின் அகத்தும் புறத்தும் பொருந்துமாற்றான் நிகழும் என்றவாறு. |