களவியல்107

செவிலி   ஐயுற்றுத்   தேடமுற்பட்டவழி விரைந்து மனைக்கண் சேர்தல்
வேண்டுதலின்   மனையோர்   கிளவி   கேட்கும்  வழியது எனப்பட்டது.
அதனான்   இல்லகம்   என்பது   பார்வைக்கு   உட்பட்ட இடம் என்பது
உய்த்துணரப்படும்.
   

மனையோர்   கிளவி   கேட்கும்   வழியது   என்ற   இடம் மதிலின்
புறத்ததெனக்   கொள்ளாவிடின்   இரவுக்குறிவந்த   தலைவன்    குறியீடு
செய்தற்கும்,   தலைவி   அல்ல   குறிப்பிடுதற்கும்    வாய்ப்பின்மையறிக.
இதனை  ஓராதார் இரவுக்குறி மனையின் அகத்தும் புறத்துமே நிகழும் என
மயங்குவர்.
 

எ - டு :

'உளைமான் துப்பின்' என்னும் அகப்பாட்டினுள் 

(102)

"காவ லறிதல் ஓம்பிப் பையென 

வீழாக் கதவம் அசையினள் புகுந்து 

உயங்குபட ரகலம் முயங்கித் தோள்மணந்து 

இன்சொல் அளைஇப் பெயர்ந்தனள் தோழி"
 

எனவரும். இஃது இல்லகத்து நிகழ்ந்த இரவுக்குறி.
 

'கூறுவங்கொல்லோ' என்னும் அகப்பாட்டினுள்

(198)

"இளமயில் சூழ்ந்த மடமயில் போல 

வண்டுவழிப் படர தண்மலர் வேய்ந்து 

வில்வனப் புற்ற நல்வாங்கு குடைச்சூல் 

அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து 

துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் 

ஆன்ற கற்பின் சான்ற பெரியோள்" எனவரும்.
 

இது மதிற்புறத்து நிகழ்ந்த இரவுக் குறி. பிறவும் இவ்வாறே
கண்டுகொள்க.
 

சூ. 134 :

பகற்புணர் களனே புறனென மொழிப 

அவளறி வுணர வருவழி யான  

(42)
 

க - து :
 

பகற்குறி நிகழும் இடமாமாறு கூறுகின்றது.
 

பொருள் : பகற்குறி   நிகழும்   களமாவது   மேற்கூறிய களத்திற்குப்
புறத்ததாகும்      எனக்கூறுவர்    நூலோர்.    அதுதான்   தலைவியாற்
சுட்டப்பட்டதாகித் தலைவன் உணர வருமிடமாகலான் என்க.
 

தலைவியாற்   சுட்டப்பெறும்   களன்  தலைவி முன்பே அறிந்ததாகித்
தலைவன்   உணர   அவளான்   அறிவிக்கப்பட்ட  இடனாகலின் "அவள்
அறிவுணர வரும்வழி"  என்றார்.   புறம்   என்றது  இல்லத்தைச் சார்ந்தும்
அடுத்தும் அமைந்த பொழிலும் சோலை