நூ. 109 : இந்நூற்பாவினை நச்சினார்க்கினியரைப்  பின் பற்றித் தலைவி
கூற்றாகக் குறிப்பிடுகிறார். வாளாண் எதிரும் பிரிவையே தாமும்  பாடமாகக்
கொண்டுள்ளார். நச்சினார்க்கினியர் வாளாண் எதிரும் பிரிவினை முடியுடை
வேந்தர் ஏவலிற் பிரியும் அரசர்க்கு என்பார். இங்ஙனங் கூறுதல் தலைவன்
பெருமைக்கு இழுக்கு என்கிறார் இவர். வேந்தனின்   ஒரீஇய   ஏனோரும்
தலைவராதற்   குரியராதலின்     அவருக்கு    இழுக்கு   யாண்டையது?
இக்களவொழுக்கம் முடியுடை வேந்தர்க்கு யாண்டும் நிகழ   வாய்ப்பின்மை
உலகியலொடு பொருத்திக் கற்பனை செய்தும் உணரலாம்.
 

நூ. 112 : 'மரையா மரல்கவர' என்பது களவுக்கால  நிகழ்ச்சி பற்றியதா?
அங்ஙனம் கொள்ள வேண்டின் பொருத்தமான விளக்கம்  எழுதி  அதனை
உறுதிப்படுத்தல் வேண்டும்.
 

நூ. 113 : வழிபாடு   மறுத்தல்,   கைப்பட்டுக்   கலங்குதல் - நாணுமிக
வரினும் இட்டுப் பிரிவிரங்கினும்,   அருமை   செய்தயர்ப்பினும்,  வந்தவழி
எள்ளினும் விட்டுயிர்த்து அழுங்கினும் - நொந்து   தெளிவு  ஒழிப்பினும் -
முதலாய தொடர்களுக்கு இளம்பூரணரை ஒட்டி  வரைந்திருக்கும்  விளக்கம்
மிகச் சிறப்பாக உள்ளது.
 

அருமைசான்ற நாலிருவகை என்று இங்குக் குறிப்பிடும் ஆசிரியர் இவை
தோழியிற் புணர்விற்   கூறப்பட்டனவாயின்   ஆண்டு   இவ்எட்டனையும்
எண்ணிட்டுச் சுட்டாமல் உணர்ச்சி   ஏழினும்   உணர்ந்த   பின்றை  என
ஏழனை மட்டும் எண்ணிட்டு எட்டாவதனை   அடுத்துக்   குறிப்பிடுவாரோ
என்னும்   ஐயம்   அறுக்கப்பட்டிலது. பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி
என்பதனோடு அருமை சான்ற நாலிருவகை  சிறப்பாகப்    பொருந்துவதும்
அதற்கு   நச்சினார்க்கினியர்   எடுத்துக்காட்டிய   பாடலும்  அப்பாடலில்
இருநான்கு  கிளவியைப்   பொருத்திக்   காட்டியுள்ள   பாங்கும்    மிகச்
சிறந்திருப்பதும் நோக்கத்தக்கன. உணர்ச்சி ஏழனையும்   உணர்த்துவதற்குப்
போதிய   எடுத்துக்காட்டுப்   பாடல்கள்     கூட   இல்லை   என்பதும்
குறிப்பிடத்தக்கது. ஏமஞ்சான்ற உவகை - கருத்து இனிதாக உளது. ஆனால்
உரையில் வருவிக்கப்பட்ட சொற்கள் மிகப் பலவாக உள்ளன.
 

பரத்தை   என்பதற்குக்  கற்பிற்குரிய   பிரிவாகிய  ஒழுக்கம்   என்று
நச்சினார்க்கினியர் வலிந்து விளங்கக் கூறுவதாக   இவர்   குறிப்பிடுகிறார்.
பரத்தை - அயன்மை என்றே நச்சினார்க்கினியர்