கற்பியல்129
எ - டு :

'அளிநிலை பொறாது' என்னும் அகப்பாட்டினுள் 

. . . . . . .ஒண்டொடி 

உழைய மாகவும் இனைவோள் 

பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே  

(அகம்-5)
 

என அஞ்சியவாறு காண்க.
 

23) தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் என்பது :  களவுக் காலத்து
நின்னைப் பிரியேன் பிரியின் தரியேன்  என்ற   வாய்மையைப்   பிழைத்த
நிலையை எண்ணுமிடத்தும் என்றவாறு.
 

பருவம் பிழைத்தமை பற்றி முன்பு    விதித்தமையான்    இது    சூள் பிழைத்தமை பற்றியது என்பது   போதரும்.    எ - டு :   வந்துழிக்கண்டு கொள்க.
 

24) உடன் சேறற் செய்கையொடு   அன்னவை  பிறவும் மடம்பட வந்த
தோழிக்   கண்ணும் என்பது :   இவள்   நின்பிரிவை   ஆற்றாளாதலின் உடனழைத்துச் செல்க    எனக்கூறிச்செயற்படுதலொடு    அவைபோல்வன
பிறவுமாகக் கூறித்  தோழி   தன்அறியாமை    தோன்றவந்த   விடத்தும்
என்றவாறு.
 

உடன் அழைத்துச் செல்க எனக்கூறி உடன்போதற்கு ஆவனபுரிவாளாய்
நிற்றலின்   "செய்கையொடு"    என்றார்.    அறிவுடையாளாகிய   பாங்கி
தலைவியின் துயர் ஒன்றையே கருதி எண்ணரும்  பாசறை   பெண்ணொடு
செல்லுதல் முறைமையன்று என்பதை மறந்து கூறினாளாதலின்  "மடம்  பட
வந்த தோழி" என்றார்.
 

எ - டு :

'பாஅல் அஞ்செவி' என்னும் பாலைக்கலியுள் 

பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு 

எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது 

அந்நாள் கொண்டிறக்கும் இவள்அரும் பெறலுயிரே  

(கலி-5)
 

என்றாங்குக் கூறுதல்.
 

25) வேற்றுநாட் டகல்வயின்   விழுமத்தானும் என்பது : நாடிடையிட்ட
மொழிபெயர் தேயத்துப் பிரியும் பிரிவிற்கு ஒருப்பட்ட   காலை   இடும்பை
கொள்ளுமிடத்தும் என்றவாறு.
 

பகை   முதலாய   பிரிவினைக்  கருதி எய்தும் துன்பம் பற்றி முன்னர்
"நின்றநனி பிரிவின் அஞ்சிய பையுளும்" எனக்  கூறினமையின்   இப்பிரிவு
ஓதற்பிரிவென்பது போதரும். பிரிவென வாளா கூறாமல் வேற்று நாட்டு என
விதந்தமையானும் அது வலியுறும்.