| எ - டு : | "கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும் |
| கேளல் கேளிர் கெழீஇயனர் ஒழுகவும் |
| ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து |
| ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் |
| அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன |
| பெறலரும் நன்கலம் எய்தி நாடும் |
| செயலும் செய்வினை முற்றின மாயின் |
| அரண்பல கடந்த முரண்கொள் தானை |
| வாடா வேம்பின் வழுதி கூடல் |
| நாள்அங் காடி நாறும் நறுநுதல் |
| நீளிருங் கூந்தல் மாஅ யோ ளொடு |
| வரைகுயின் றன்ன வான்றோய் - நெடுநகர் |
| நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை |
| நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து |
| நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப |
| முயங்குகம் சென்மோ நெஞ்சே" |
| (அகம்-93) |
இது வினை முற்றி மீள்வோன் நெஞ்சிற்குக் கூறியது. சிறப்புப் பெற்றுக் கூறியவை வந்தவழிக் கண்டு கொள்க. |
28) பேரிசையூர்திப் பாகர் பாங்கினும் என்பது : சிறப்பொடு மீள்வோன் பெரிய புகழையுடையதாகிய தேரினைச் செலுத்தும் பாகரிடத்தும் என்றவாறு. 'பாகர்' எனப் பன்மையாற் கூறினமையின் இளையோர்பாற் கூறுவனவும் கொள்க. |
| எ - டு : | "வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும் |
| தம்திறை கொடுத்துத் தமர்ஆயினரே |
| முரண்செறிந் திருந்த தானை இரண்டும் |
| ஒன்றென அறைந்தன பணையே, நின்தேர் |
| முன்னியங் கூர்தி பின்னிலை ஈயாது |
| ஊர்க பாக ஒருவினை கழிய - " |
| (அக-44) |
இது துணைவேந்தன் வினை முற்றி மீளுங்கால் பாகனிடத்துக் கூறியது. |
| "இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென |
| புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் |
| ஏறியது அறிந்தன் றல்லது வந்த |
| ஆறுநனி யறிந்தன்றோ இலனே தாஅய் |
| முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில் |
| கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் |
| மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ |