132கற்பியல்

இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே 

      

வான்வழங் கியற்கை வளி பூட் டினையோ 

மானுரு வாகநின் மனம்பூட் டினையோ 

உரைமதி வாழியோ வலவ"  

(அக-384)
 

இது தானைத்தலைவன்  மனைவந்திறங்கிப் பாகனொடு கூறியது. பிறவும்
சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க.
 

29) காமக்கிழத்தி மனையோள்  என்றிருவர்   ஏமுறுகிளவி   சொல்லிய
எதிரும் என்பது : தலைவியொடு ஓரில்லத்து உடன்   வதியும் காமக்கிழத்தி
மகன்றாயாகிய   இற்கிழத்தி   என்று   கூறப்படும்   இருவர்   சொல்லிய வருத்தமைந்த உரைகளை ஏற்று மறுமொழி கூறுமிடத்தும் என்றவாறு.
 

ஏறுமுறுகிளவி என்றது பிரிந்து  செல்வுழிச்   சுரத்து வருந்தினிர் கொல்
எனவும், எம்மை     நினைத்திரோ   எனவும்   பிறவுமாகப்   பரிவுற்றுக் கூறுவனவாம். இற்பிறப்புக் காரணமாக மனைவி விரைந்து உரையாளாதலின்
காமக்கிழத்தி அவள் கருத்தையும் உள்ளடக்கி முனைந்து  கூறும் ஆதலின்
காமக்கிழத்தியை முற்கூறினார் என்க.
 

எ - டு :

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை 

அரிய வாயினும் எளிய வன்றே 

அவவுறு நெஞ்சம் கவவுநனி விரும்பி 

கடுமாண் திண்டேர் கடைஇ 

நெடுமான் நோக்கிநின் உள்ளியாம் வரவே  

(ஐங்-360)
 

இஃது இருவர்க்கும் ஒப்பக் கூறியது.
 

"தொடங்கு   வினைதவிரா"     என்னும்    அகப்பாட்டுத்   (அக-29)
தலைவியிடத்துக் கூறியது.
 

30) சென்ற தேஎத்து உழப்புநனி விளக்கி   இன்றிச் சென்ற தன்னிலை
கிளப்பினும் என்பது : அங்ஙனப் பரிவுற்றுக் கூறிய   இருவர் பாலும் தான்
சென்ற நாட்டகத்துத்  தனக்கு நேர்ந்த   வருத்தத்தை  மிகவும்   விளங்கச்
சொல்லித்        தலைவியின்றித்     தனித்துச்   சென்றமையான  உற்ற நிலைமையினைக் கிளந்து கூறுமிடத்தும் என்றவாறு. எ-டு: வந்தவழிக் கண்டு கொள்க.
 

31) அருந்தொழில்   முடித்த   செம்மற்காலை   விருந்தொடு நல்லவை
வேண்டற்கண்ணும் என்பது : செயற்கரியவாய வினை