கற்பியல்133

களைச்   செய்து   முடித்தலான்   தலைமைத்தன்மை   சிறந்த   காலத்து
விருந்தெதிர்   கொண்டு    உவத்தற்குரிய    நல்லனவற்றைத்    தலைவி ஆற்றுதலைக் காண விரும்பியவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

முரம்புதலை மணந்த நிரம்பா இயவின் 

ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் 

களரிப் புளியின் காய்பசி பெயர்ப்ப 

உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலிர் 

முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை 

வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் 

நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப 

விருந்தயர் விருப்பினள் வருந்தும் 

திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே  

(நற்-374)
 

எனவரும்.
 

32) மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்
கண்ணும் என்பது : வினை முற்றி மீண்டு   வந்து   அகம்புகும்   தன்னை
எதிரேற்கும் மாலை முதலாய மங்கலப் பொருள்களை  ஏந்திய பெண்டிரும்
வினைபுரியும்  மக்களும்    கேளிர்    ஒப்ப    ஒழுகுமிடத்து   உள்ளம்
மகிழ்தற்கண்ணும் என்றவாறு.
 

தலைமக்கள் வேந்தரும் மன்னருமாகிய   வழிப்   பெண்டிர்   என்றது
தலைவியின்  ஆயத்தாரையும்    குற்றேவல்   புரிவோரையும்   குறிக்கும்.
மக்கள் என்றது அமைச்சர் முதலாகிய அரசச்   சுற்றத்தினைக்   குறிக்கும்.
வணிகரும், வேளிருமாயின் முறையே  குற்றேவல்   மகளிரையும்   துணை
வினையாளரையும் குறிக்கும்.  அவர் தம்   உறவினரைப்போல   மகிழ்ந்து
அன்பு செய்தொழுகலின் "கேளிர் ஒழுக்கத்து" என்றார்.  கேளிர்  ஒழுக்கம்
என்பதன்கண் உவமஉருபு தொக்கதென்க. புகற்சி = விருப்பம் - மகிழ்ச்சி :
எடுத்துக்காட்டு வந்தவழிக் கண்டு கொள்க.
 

33) ஏனை வாயில் எதிரொடு தொகைஇ என்பது :  மேற்   கூறப்பெற்ற
பெண்டிரும், மக்களும் அல்லாத பாணர்,  பாடினி   முதலிய   வாயிலோர் புரியும்   வரவேற்பினை   ஏற்று   அவர்க்கு   முகமனும்   மறுமொழியும்
கூறுதலொடுகூடி என்றவாறு. எ - டு : வந்தவழிக் கண்டு கொள்க.
 

பண்ணமை பகுதி முப்பதினொரு   மூன்றும்   எண்ணருஞ்   சிறப்பின்
கிழவோன் மேன மேலும் விரித்துச் செய்யுள் செய்தற்கு வகையாக அமைந்த
இம் முப்பத்து மூன்று கூற்றுக்