குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் செய்தி அவர் உரையில் அமைந்த இடம் புலப்படவில்லை.1 |
நூ. 115 : தா என்பதற்கு நச்சினார்க்கினியர் கொண்ட முதற்பொருளை விடுத்து இளம்பூரணர் கொண்ட பொருளை ஏற்றமைக்கு விளக்கம் வரைந்திருக்கலாம்.2 |
நூ. 116 : நாண நாட்டம், நடுங்க நாட்டம் என்பனவும் ஏற்கத்தக்கனவே என்ற கருத்தினை விளக்கியுள்ளார். பேதைமை யூட்டலும் - நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுக்களில் தோழியை உயர்த்தற் பன்மைக்கண் வினாவினான் என்றும் தோழி தன் பொதுவான விடையைப் பன்மை வாய்ப்பாட்டால் சுட்டுகின்றாள் என்றும் கொண்டால் தலைவன் தோழி தனித்திருந்தவழி வினவியதாகக் கோடற்கண் இழுக்கில்லை. இலக்கியம் வந்த வழிக் காண்க எனக் கூறும் இடர்ப்பாடு இராது. முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துணர்த்தலும் - புது உரை நேரிது. ஆனால் இதற்கு எடுத்துக்காட்டுத் தரப்பட்டிலது. |
மாயம் செப்பி வந்த கிழவனைப் பொறுத்தகாரணம் குறித்த காலையும்-புது உரையில் தலைவியும் தோழியும் தலைப்பெய்தவழித் தலைவன் வந்தமையைக் குறிப்பிடச் சொற்றொடர் எதுவும் நூற்பாவில் இல்லை. புணர்ந்தபின் - களவு தன்மனத்தே பொருந்தியபின்னர் - தலைவன் தலைவியது புணர்ச்சி உண்மையைத் தெளிந்தபின்னர் - இது வலிந்துரையே. |
இன்னதன் பின்னர் இன்னது நிகழவேண்டுமென்ற வரையறையின்று இடையே பல செய்திகளும் நிகழாமலிருக்கலாம், குறைந்தவட் படர்தலுக்கு அடுத்துத் தோழியிற் புணர்வு நிகழலாம். அங்ஙனம் நிகழாவழி, நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும் முதலியவை நிகழலாம். ஆதலின் புணர்ந்தபின் என்பதற்குக் களவு தன் மனத்தே பொருந்திய பின்னர் என்று வலிந்து பொருள் செய்வதன் தேவை ஆராய்தற்குரியது. |
எண்ணரும் பன்னகைக் கண்ணிய வகையினும், களவு அலராகுமேயன்றி நகையாகாது. எடுத்துக்காட்டுப் பாடலிலும் நகை பற்றிய குறிப்பு இல்லை. ஒன்றையடுத்தே ஒன்று நிகழ்தல் வேண்டும் என்ற வரையறை இல்லை. ஆதலின் இன்னதனை யடுத்தே இன்னது வரல்வேண்டும் என்பதின்று. இக்கூற்றின் |
|
1. 'மறைந்தவற் காண்டல்' என்னும் சூத்திரஉரையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. |
2. காமக்கிழவன் உள்வழிப்படுபவள் - செல்வாம் எனக்கூறுவது மிகையாகலின் தோழியிடத்துக் கூறுவதாகக் கொள்ளப்பட்டது. |