களும் எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய தலைமகனிடத்தனவாகும். |
தலைவனது ஒழுகலாறு கற்பின்கண் மிகப் பரந்து பட்ட நிலையை உடையதாகலின் நல்லிசைப்புலவோர் மேலும் மேலும் பலவாக விரித்துச் செய்யுள் வழங்குதற்குரிய வகைமையான் இவை அமைந்துள்ளமை தோன்றப் "பண்ணமை பகுதி முப்பதின் ஒரு மூன்று" என்றார். பண்ணுதல் = செய்யுள் செய்தல். கற்பின்கண் தலைமகன் ஒன்னாரைவென்று தன்னோரைப் புரந்து ஈதலும் துயத்தலும் ஓம்பலுமாகப் பலர் போற்ற இல்லறம் புரிந்து வாழ்தலின் "எண்ணருஞ் சிறப்பின் கிழவோன்" என்றார். அங்ஙனம் விரித்துப் பண்ணியவாக வந்தனவற்றுள் சில வருமாறு : |
| எரிகவர்ந் துண்ட என்றுழ் நீளிடைச் |
| சிறிதுகண் படுப்பினும் காண்குவன் மன்ற |
| நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் |
| வேங்கை வென்ற சுணங்கின் |
| தேம்பாய் கூந்தல் மாஅ யோளே |
| (ஐங்-324) |
இது தோழி வினாயவழித் தன் ஆராக்காதலைக் கூறியது. |
| தாழிருள் துமிய மின்னித் துண்ணென |
| வீழுறை இனிய சிதறி ஊழின் |
| கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் |
| பெய்இனி வாழியோ பெருவான், யாமே |
| செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
| இவளின் மேவினம் ஆகிக் குவளைக் |
| குறுந்தாள் நறுமலர் நாறும் |
| நறுமென் கூந்தல் மெல்லணை யேமே |
| (குறு-270) |
வினை முடிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியொடு உடனுறை மகிழ்ச்சி கூறியது. |
| ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
| நீடுவ தன்றுகொல் என்று (குறள் - 1307) |
| ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
| நீடுக மன்னோ இரா (குறள் - 1329) |
இவை ஊடிப்பெறும் மகிழ்ச்சி கூறின. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
| சூ. 149 : | அவனறிவு ஆற்ற அறியு மாகலின் |
| ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் |