விளக்கமே "இறந்து குறையுற்ற கிழவனைத் தோழி" என்னும் பொருளியல் நூற்பாவாகும். இக்கருத்து இவர்க்கும் உடன்படாதல் 15 ஆம் பக்கத்தில் இவராலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. |
வேண்டாப் பிரிவினும் - உரைவிளக்கத்தின் பொருத்தம் ஆராய்தற்குரியது. காவற்பிரிவும் துணைவயிற்பிரிவும் வேண்டாப் பிரிவாயின் தலைவன் கடமைஉணர்ச்சி வழுவினான் ஆகானோ? - துணைவயிற்பிரிவு கால நீட்டமுடையது. அஃது இட்டுப் பிரிவாகுமோ?3 |
புணர்ந்துழியுணர்ந்த அறிமடச்சிறப்பினும் - புதுஉரையை வலியுறுத்த எடுத்துக்காட்டு இன்று. அவள் விலங்குறினும் - இதன் புத்துரை வலிந்துரையாதல் தேற்றம். இங்ஙனம் உரை கோடல் ஆசிரியர் கருத்தாயின் - தாய் விலங்குறினும் என்றே நூற்பாத்தொடரை யாத்திருப்பார்.4 |
நூ. 117 : ஆடிய சென்றுழி அழிவுதலைவரினும்-உரை இனிது - ஆனால் எடுத்துக்காட்டு இன்று. |
நூ. 124 : முந்நளல்லது துணையின்று கழியாது - முந்நாள் பூப்புக்காலப் பிரிவென்பது வெளிப்படை - புத்துரையின் பொருத்தம் மனத்திற்கு இயைவதாக இல்லை.5 |
நூ. 125 : துணையோர் கருமம்-பன்மைச் சொல்லாதலை உட்கொண்டும், அடுத்த நூற்பாவை நோக்கியும் நச்சினார்க்கினியர் உரை சிறப்பாகத் தோன்றுகிறது. |
நூ. 133 : எயிற்புறத்து இரவுக்குறி பலரும் அறிய வாய்ப்புடைமையானும் அவ்வழி இல்லத்தார் கூற்று, தலைவன் தலைவி செவிப்பட வாய்ப்பின்மையானும் மனைக்கட்டிடம் நீங்கிய தோட்டப் பகுதியாகிய மனையின் மதியகத்துப பகுதியே இரவுக் குறிக்கு ஏற்றது எனத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டுப் பகுதிகளும் மதிலின் உட்புறப்பகுதியையே சுட்டுவன. மதிற்புறம் என்பதற்கு வாய்ப்பில்லை. |
கற்பியல் |
கற்பில் தலைவி முதன்மை - கற்பின் விளக்கம் - கற்பின் புலனெறி வழக்குப் பற்றிய மரபு என்பன நயம் மிக உடையன. |
|
3. தலைவன் கடப்பாடு பற்றியதென்பதே கருத்து. விளக்கம் சாலாது போலும். |
4. அவள் என்றசுட்டு, செவிலியைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது. |
5. 'அந்நாளகத்தும்' அதுவரைவின்றே என்றதனான் பூப்புநாளாகக்கொள்ளுதற்கு இயையாமையொடு - இப்புத்துரை விளக்கம் நூல்நெறிக்கு இன்றியமையாதது என்பது என்கருத்து. |