நூ. 144 : கரணம் என்பதன் விளக்கம் நன்று. 145-147 நூ. உரை, உரையாளருடைய கோட்பாடுகளை விளக்கும் வகையில் சிறப்பாக உள்ளது. நூ. 148. கற்பொழுக்கத்துத் தலைமகளிடம் நிகழும் கூற்றுக்கள் பற்றித் தொடக்கத்தில் வரையப்பட்டுள்ள குறிப்பு மிகவும் தேவையானது. |
நூ. 148 : 'அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்' தலைவன் தலைவியின கற்பினைக்கண்டு அவள் நோகுமாறு புறத்தொழுக்கம் கொள்ள அஞ்சுதலும் - களவுக் காலத்து அவளைப்பற்றி அலர் கூறியவர்கள் அவளது கற்புக்காலத்துத் தம் பண்டைத் தவறு கண்டு அஞ்சுதலும் போல்வனவற்றை உட்கொண்டு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். |
"அஞ்சவந்த உரிமைக்கண்ணும்" நன்னெறிப்படரும் தொன்னலப் பொருளினும்" "பெற்றதேஎத்து.........உரைப்பினும்" "அல்லல்தீரப்.... பொருளின் கண்ணும்" ''அந்தரத்தெழுதிய.......ஒழுகலும்" " அழியல் அஞ்சல்..........பொருளினும்" "தானவட் பிழைத்த பருவத்தானும்" "நோன்மையும்....தகுதிக்கண்ணும்" "பிரிவின்......பகுதிக்கண்ணும்" "சென்று வழியும்" "தானவட் பிழைத்த நிலையின் கண்ணும்" இப்பகுதிகட்கு வரையப்பட்ட புதிய உரையை அரண் செய்யும் வகையில் எடுத்துக்காட்டு எதுவும் தரப்பட இயலாமை குறையேயாகும். இப்புதிய உரை ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பினை எடுத்துக்காட்டின்மை குறைபடுத்துதலைக் காண்க. தோழியைக் காமக்கிழத்தி என்றதன் பொருத்தம் ஆராய்தற்குரியது.6 |
நூ. 149 : "அவனறிவு ஆற்ற ........ அன்பின் கண்ணும்". "மாதர் சான்ற உவகைக்கண்ணும்" புதுவுரை நோக்கத் தக்கது. "தாயர் கண்ணிய" "மாயப்பரத்தை" என்ற தொடர்களின் உரை மிக நயமானது. |
நூ. 152 : திருமணம் நிகழ உதவிய தெய்வத்துக்குப் பரவுக் கடன் கொடுக்குமாறு தலைவனிடம் தோழி வேண்டியமை தன்னலம் ஏதும் சிவணாத வகையில் அவர்கள் நன்மையையே கருதிக் கூறலின் தலைவனால் ஏற்றுக் கொள்ளத் தக்கதேயன்றித் தோழி தலைமை செய்தொழுகினாளாகக் கருதப்படாது - தலைவன் புறம்படு விளையாட்டுப் பற்றி மகிழ்ச்சி கூர்பவள் அஃது அலராயிற்றென்று தோழி குறிப்பிட்ட வழியும் அது பற்றி வருந்துபவள் அல்லள். ஈண்டு மனமகிழ்ச்சி என்பது தலைவன் கொண்ட |
|
6. நற்றாய்க்குச் செவிலியும் தலைவிக்குத்தோழியும் மரபுவழிப்பட்ட உரிமையாகப் பேசப்படுதலின் மன்னர் குலவரலாறு நோக்கித் தெளியப்பட்டது. |