இனி "வாயில் உசாவே தம்முளும் உரிய" (செய்-191) என்பதனான் அவர்தம்முட் கூறிக்கொள்ளும் கூற்றுக்களை இதன்பாற்படுத்து அடக்கிக் கொள்க. அவற்றுள் சில வருமாறு : |
கானங் கோழிக் கவர்குரற் சேவல் |
ஒண்பொறி எருத்திற் றண்சிதர் உறைப்பப் |
புதல்நீர் வாரும் பூநாறு புறவிற் |
சீறூ ரோளே மடந்தை வேறூர் |
வேந்துவிடு தொழிலொடு செலினும் |
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே |
(குறு-242) |
இது பாணன், பாடினிக்குத் தலைவன் காதன்மை சிறப்புக் கூறியது. |
'கண்டிசின் பாண பண்புடை தம்ம" என்னும் குறுந்தொகைப் பாட்டு (359) தோழி பாணற்குரைத்தது. "மதவலியானை" என்னும் அகப்பாட்டு (அக-354) விறலி பாணற்குரைத்தது. பிறவும் சான்றோர் இலக்கியங்களுட் கண்டு கொள்க. |
| சூ. 155 : | கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள |
| நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும் |
| செவிலிக் குரிய வாகும் என்ப |
(12) |
க - து : | கற்பின்கண் செவிலி கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றது. |
பொருள் : இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்திற்கும் ஏற்புடையவாய் வழிவழித் தொடர்ந்து மேற்கொள்ளத் தக்கனவாய நற்பொருள்களை எடுத்துரைத்தலும் நல்லவையல்லாதவற்றைக் கடிந்துரைத்தலும் செவிலிக்குரியவாகும் எனக் கூறுவர் புலவர். |
| எ - டு : | கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் |
| உட்குடையாள் ஊராண் இயல்பினாள்-உட்கி |
| இடனறிந் தூடி இனிதின் உணரும் |
| மடமொழி மாதராள் பெண் |
(நாலடி-384) |
இது நல்லவை கூறி அல்லவை கடிந்தது. |
"ஆகும்" என்றதனானே தலைவியின் இல்லற மாண்பினை உவந்து நற்றாய்க்குக் கூறுவனவும் கொள்க. |
பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் |
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப் |