பொருள் : களவின்கண்ணும் கற்பின்கண்ணும் அலர் எழா நின்றது எனக் கூறும் கூற்றுத் தோழிக்கும் தலைவிக்கும் நீக்கும் நிலைமையின்று. |
தோழி கூற்றும் தலைவி கூற்றும் அதிகாரப்பட்டு வருதலின் அவ்விருவரும் கொள்ளப்பட்டனர். |
| எ - டு : | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று |
(குறள்-1146) |
இதுகளவு. |
| வேதின வெரிநின் ஓதி முதுபோத்து |
| ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும் |
| சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து |
| ஈங்கியான் தாங்கிய எவ்வம் |
| யாங்கறிந் தன்றிவ் அழுங்க லூரே |
(குறு-140) |
இதுகற்பு. இவை தலைவி கூற்று. |
| 'கரும்பின் எந்திரம்' என்னுங் ஐங்குறுநூறு |
(55) |
தோழி அலர் கூறியது. |
சூ. 165 : | அலரிற் றோன்றும் காமத்து மிகுதி |
(22) |
க - து : | அலர் எழுதலான் எய்தும் பயன் கூறுகின்றது. |
பொருள் : அலர் காரணமாகத் தலைவன் தலைவியரிடத்துக் காதற் காம உணர்வு மிக்கு விளங்கும். |
| எ - டு : | ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் |
| நீராக நீளும்இந் நோய் |
(குறள்-1147) |
| நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற் |
| காமம் நுதுப்பேம் எனல் |
(குறள்-1148) |
கௌவை = அலர். என்றாங்குக்காண்க. |
சூ. 166 : | கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே |
(23) |
க - து : | காமமிகுதி தோன்றுதற்கு மற்றுமொரு காரணமாமாறு கூறுகின்றது. |
பொருள் : தலைவன் பரத்தையரொடு ஆடலும், பாடலும், யாறும், குளனும் படிந்து நீராடலும் ஆகிய விளையாட்டினை மேற்கொள்ளும் அவ்விடத்தும் காதற்காம உணர்வு மிக்குத் தோன்றும். |