| யாண்டைய பசலை என்றனன் அதனெதிர் |
| நாணிலை எலுவ என்றுவந் திசினே |
| செருநரும் விழையும் செம்மலோ னென |
| நறுநுத லரிவை போற்றேன் |
| சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே |
(நற்-50) |
இது தலைவனது கொடுமையைத் தோழி புனைந்துரை வகையாற் கூறியது. |
| சூ. 169 : | முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் |
| பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர் |
(26) |
க - து : | இதுவுமது. |
பொருள் : குறையிரந்து வேண்டுதலாகிய பின்னிலை முயற்சிக்கண் தோழி முதலாய எல்லாவாயில்கட்கும் முன்னிலைப் புறமொழியாகக் கூறும் கூற்றுத் தோன்றுமெனக் கூறுவர் புலவர். |
முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாரைப் படர்க்கை யாகப்புறப்படுத்து அவர்க்குரைப்பது. |
| எ - டு : | உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனும்தாம் |
| கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல் |
| பண்டுமிவ் வுலகத் தியற்கை அஃதின்றும் |
| புதுவ தன்றே புலனுடை மாந்திர் |
| தாயுயிர் பெய்த பாவை போல |
| நலனுடையார் மொழிக்கட் டாவார்தாந் தந்நலம் |
| தாதுவேர் பறவையின் அருந்திறல் கொடுக்குங்கால் |
| ஏதிலார் கூறுவதெவனோ நின்பொருள் வேட்கை |
(கலி-22) |
எனவந்தவாறு கண்டு கொள்க. |
| சூ. 170 : | தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் |
| பல்லாற் றானும் ஊடலிற் றணித்தலும் |
| உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும் |
| ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் |
| அணிநிலை யுரைத்தலும் கூத்தர் மேன |
(27) |
க - து : | இது வாயில்களுள் கூத்தர்க்குரிய கிளவி பற்றிய மரபு கூறுகின்றது. |
பொருள் : தொல்லவையுரைத்தலும் = பண்டையோரின் சிறந்த காதல் வாழ்வு பற்றிய வரலாறுகளை எடுத்தியம்பலும், |