களவு, கற்பு, பொருளியலுள் கூறப்படும் கூற்றுக்கள் இன்னாராற் கூறப்பட்டன என்பதே தெளிவாக உள்ளது. யாரிடம் எந்த இடத்தில் எக்கருத்திற் கூறப்பட்டன என்பன போன்ற செய்திகள் ஊகத்தாற் கொள்ள வேண்டியனவாகவே உள்ளன. தம் கருத்தை வெளிப்படுத்த எடுத்துக்காட்டுக்கள் தர இயலாத நிலையில் தம் கருத்து வலியிழந்து நிற்றல் கண்கூடு. பல நூற்பாக்கள் யாரால் எப்பொழுது கூறப்பட்டன என்ற செய்தியே ஊகத்துக்குரியதாக இருத்தலின் கருத்து வேறுபாடுகள் இருத்தல் இயல்பே. அவரவர் தத்தங் காலத்திற்கு ஏற்பத் தாம் கொண்ட கோட்பாடுகளை ஒட்டி நூற்பாப் பகுதிக்கு உரை வரைந்து செல்லுதல் இயல்பே. தொல்காப்பியர் காலத்திலேயே அந்நூற் உரை எழுதப் பெறாமையின் மெய்யுரை இன்னது என்பதனை வரையறுத்துக் கூறுதல் இயலாது. அவரவர் தம தமஅறிவு அறிவகை வகை என்றே அமைதியுற வேண்டியவராய் உள்ளோம். இந்த இடர்ப்பாட்டினைப் பதினேழாம் நூற்றாண்டில் நன்குணர்ந்த வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சிதர், சாமிநாத தேசிகர் என்பார் தாம் வரைந்த இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்களுக்குத் தாமே உரையும் வரைந்து சிக்கலைத் தவிர்த்துள்ளனர். | பொருளியல் | பொருளியலின் பாயிரவுரை விரிவாக அமைந்து முன்கூறிய செய்திகளை இயைபுபற்றி வழிமொழிகிறது. "அஃதாவது இருதிணை ஐம்பால் ...... பொருளியல் எனப்பட்டது என்றவாறு" என்றபத்தி பொருளியலின் பெயர்க்காரணம்பற்றி இவர் கொண்டுள்ள கருத்தை வெளியிடுகிறது. அடுத்த பத்திகள் அதற்கு விளக்கமாக அமைகின்றன. | சொல்லதிகாரத்துள் ஆக்கமுற்றமைந்த சொற்கள் சொல்லதிகாரத்துள் சொல்லிலக்கண நெறிபற்றியமைந்த பொருளினின்றும் வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்குமென்று பொருளதிகாரத்துள் சொற்பொருள் அறியும் முறைமை கூறுதலாலே பொருளியல் எனப்பட்டது என்கிறார். இதனை ஒழிபியல் என்றும் வழுவமைதி கூறும் இயல் என்றும் முன்னையோர் கூறும்கருத்து ஒவ்வாது என்கிறார். | நூ : 147, 198, 201-205, 214, 221, 222, 230-232, 243, 245, 247 என்ற நூற்பாக்களே இவர் பொருளியலுக்குக் குறிப்பிடும் காரணங்கள் பற்றியனவாகும். 206-213, 215-220, 223- |
|
|