229, 233-242, 245-247.   இவற்றுள்  206, 209, 211, 212, 213, 215, 216, 217,
219, 220, 226, 228, 233-238 என்பன   வழுவமைதி   பற்றிய செய்திகளை
நுவல்வன.  ஏனையவை   அகப்பொருளுக்குரிய   ஒழிபியற்   செய்திகள்.
இவ்வுரையாளர்   கருத்துப்படியமைந்த     நூற்பாக்களும்   வழுவமைதிச்
செய்திகளை நுவல்வனவாகக் கோடல் இழுக்காகாது. உரை விளக்கங்களான்
முன்னைய உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஒவ்வாதன   என்ற   செய்தி
நிறுவப்படவில்லை. எனவே இவர் கூறும்  விளக்கம்,   எச்சவியல்   என்ற
பெயர் பத்துவகை எச்சங்களைப்    பற்றிக்    குறிப்பிட்ட   காரணத்தால்
ஏற்பட்டது என்றாற்போல்வது. எனவே இவர் கூறும் பெயர்க்காரணத்துக்குத்
தலைமையும், நூற்பாப் பன்மையும் இல்லை என்பது கருதப்படுகிறது.8
 

நூ. 197 : நெஞ்சினை உயர்திணைப்பாற்படுப்பினும் அதற்கு  அஃறிணை
முடிவே கூறினமை போன்ற செய்திகள் நுட்பமானவை.
 

198. இருபெயர் மூன்றும்  உரியவாக-அஃறிணை   இருபாற்   கண்ணும்
முப்பாலும் உளவாக  என்றார்   நச்சினார்க்கினியர்.   அதற்கு விளக்கமுந்
தந்துள்ளார். இவர் ஒன்றுபல என்னும் அஃறிணை இருபாற் பொருள்கட்கும்
அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்   மூன்றும்  உரியவாகக்
கொண்டு    என்றார்.     ஆனால்     எடுத்துக்காட்டாகத்    தரப்பட்ட
பலவற்றினுள்ளும் ஒன்றிலேனும் அறம்    பொருள்   இன்பம்    மூன்றும்
உரியவாகக் கொள்ளப்பட்ட செய்தி சுட்டிக்காட்டப்படவில்லை.9
 

201.    நட்பின்     நடக்கை-தலைவனும்     தலைவியும்   புணர்ந்து
உடனுறைதலாகிய நட்பின் நடக்கை.    இத்தொடர்   இப்பொருள் தருமா?
என்பது ஐயுறத்தக்கது.
 

207.   கருத்துமிகத்     தெளிவுதருகிறது.    212. தன்னை   யழிதலும்
அவனூறஞ்சலும் - தலைவிக்குரியன   ஆகாவோ?  சென்ற நூற்பா தலைவி
தோழி இருவர்க்கும்  உரியதாகவும்,  இதனைத்தோழிக்கு  உரித்தாக்குவதன்
பொருத்தம் ஆராய்தற்குரியது.
 


8. ஆசிரியர் எச்சவியல் ஒழிபியல் பொதுவியல் என்றாற்போலக் குறியீடு
செய்யாமல் பொருளியல்  எனவரைந்துள்ளமையான் தலைமை பற்றிய
பெயராகக்கொள்ளப்பட்டது. ஒவ்வா   எனக்கருதிய   உரையாளர்தம்
கருத்துக்களை  விளக்கி நிறுவமுற்படின்  அவை    மிகவிரியுமென்று
விடப்பட்டன.
 

9. எடுத்துக்காட்டப் பெற்றவை  அறம்,  பொருள்,   இன்பம்   என்னும்
முதற்பொருள்களுள்        அடங்குவனவேயாதலின்       விதந்து விரிக்கப்படவில்லை.