| "கொல்வினைப் பொலிந்த" என்னும் அகப்பாட்டினுள் கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல் நசைஇச் சென்றஎன் நெஞ்சே" | (9) |
என்பது தலைவன் தன்னெஞ்சினை உறுப்புடையது போல் உவகைப்பற்றிக் கூறியது. |
| 'அன்றவண் ஒழிந்தன்றும்' என்னும் அகப்பாட்டினுள் "வருந்தினை வாழிஎன் நெஞ்சே, பருந்திருந்து உயாவிளி பயிற்றும் யாஉயர் நனந்தலை உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம் எம்மொடு இறத்தலும் செல்லாய்ப் பின்னின்று ஒழியச் சூழ்ந்தனை" | (19) |
என்பது தலைவன் தன்னெஞ்சினை அறிவுடையது போல் அழுகை பற்றிக் கூறியது. |
| பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே |
(குறு-19) |
இஃது உணர்வுடையதுபோல் வெகுளி பற்றிக் கூறியது. |
| ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே |
(குறு-63) |
என்பது மறுத்துரைப்பதுபோல் நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது. |
| "வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினான் செறிவளை நெகிழ்த்தான்கண் சென்றாய்மற் றவனைநீ அறியவும் பெற்றாயோ அறியாயோ மடநெஞ்சே" |
(கலி-123) |
என்பது தலைவி நெஞ்சினை உணர்வுடையது போல் நகை பற்றிக் கூறியது. |
| அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது |
(குறள்-1291) |
இது இளிவரல் பற்றி மறுத்துக்கூறியது. |