இவை துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங்கண்ணிய மரபிடை தெரிய வந்தன. |
| | "கானலுங் கழறாது கழியும் கூறாது |
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது |
ஒருநீ யல்லது பிறிதுயா துமிலனே |
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் |
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் |
தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து |
பறைஇய தளருந் துறைவனை நீயே |
சொல்லல் வேண்டுமார் அலவ" |
(அக-170) |
என்பது சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது. இது தலைவி கூற்று. |
| கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி |
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ |
(குறு-2) |
என்பது சொல்லா மரபினது சொல்லுவதாக உவகை பற்றிக் கூறியது. இது தலைவன் கூற்று. |
| "போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் |
ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ" |
(கலி-120) |
என்பது செய்கையில்லாத மாலைப் பொழுதினைத் தொழிற்படுத்தடக்கி உவமவாயிற் படுத்துக்கூறியது. இது தலைவி கூற்று. |
| | "தொல்லூழி தடுமாறி" என்னும் நெய்தற்கலியில் | (129) |
"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் | |
தூவறத் துறந்தனன் துறைவன்என் றவன்றிறம் | |
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் | |
| காதல்செய் தகன்றாரை உடையையோ நீ" | |
என்பது தம்பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி உவமவாயிற் படுத்துக் கூறியது. |
| "சென்றது கொல் போந்தது கொல் ...... நெஞ்சு" |
என்பது கைக்கிளைக்கண் நெஞ்சினை உறுப்புடையது போல் அவலம் பற்றிக் கூறியது. |
| ஓங்கெழிற் கொம்பர் நடுவிதெனப் புல்லும் |
.... ...... ...... ...... ....... ..... ....... ....... ...... ...... |
ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான் |
| (நச்-மேற்) |