213. களவிற்குஇவை   ஏலா   எனினும், தலைவன் செல்வச் செருக்கான்
இவை தேவைப்படுதலின்   ஏற்கத்தக்கன என்ற   வழுவமைதி   நுவல்வது
இந்நூற்பா.
 

215.  பொருள் என்பது களவினைப்   புலப்படுத்துகிறது   என்கிறார் -
மேற்கோள் நூற்பாக்களில் பொருள் என்ற சொல் களவு  என்ற பொருளில்
வந்துள்ளதா? 209ஆம் நூற்பாவிலும் அப்பொருள் என்பதே  களவின் வழி
ஒழுகும் அவள் விருப்பம் என்று பொருள் செய்யப்பட்டுள்ளது.10
 

காப்புக் கைம்மிக்கவிடத்துத்  தலைவன்  வரவினை  விலக்குதற்கு வேறு
ஆறு புலப்படா இடத்து அவனைப் பொருள்வயிற் பிரியச்   செய்து  காப்பு
மிகுதியைச்   சற்று   நெகிழ்த்துப்பின்   பொருளொடு   வந்த தலைவனை
விரைவில் மணம்  செய்து கொள்ள   வற்புறுத்தல் இயலும் என்ற கருத்தில்
வழுவமைதி  நூற்பாவாக   நச்சினார்க்கினியர்   பொருள்   செய்வதற்கண்
குறையிருப்பதாகத் தெரியவில்லை.
 

220. காணுநர் எள்ளக் கலங்கித்தன் ஆண்மையை நெகிழ்த்து மடலேறும்
தலைவன்   மாட்டு   நாணுத்தலைப்பிரியா நிலைஉள்ளதா? அவ்வண்ணமே
நாணுவரை  இறந்து  மன்றத்திருந்த  சான்றவர்   அறியத்தன்  துணைவன்
பெயரும்   பெற்றியும் பிறவும் கூறிய தலைவியின்கண் நாணுத்தலைப்பிரியா
நிலை உள்ளதா?11
 

225. இந்நூற்பா   உரை     நன்று.   230. இறைச்சி   என்ற   சொற்
பொருளாராய்ச்சி நன்று.
 

231. வேங்கை தொலைத்த - இதனை   இறைச்சி   என்று  விளக்குவது
உள்ளுறை உவமத்தை விளக்குவது போலவே உள்ளது. இறைச்சிப் பொருள்
தெளிவாகப் புலப்பட்டிலது. 231.  எடுத்துக்காட்டுப்   பாடலான   இறைச்சி
தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 

237.  பொழுது   இறந்ததுபோலக்   கிளத்தல் - என்று   இணைத்துப்
பொருள்கூறி, மிகுதியை வருத்தத்தோடு இணைத்து   வருத்தமிகுதி  என்று
கொள்வதும் - மிகுதி  என்பதற்கு   முல்லை முதலியன மிகுதியாகப் பூத்த
செய்தியைக் குறிப்பிடுவதும்,
 


10. களவாகிய கைகோள் என்னும் பொருளே  அவ்வந்நூற்பா  உரையுள்
தரப்பட்டுள்ளது.
 

11. செயிர்தீர்  கற்புச்   சிறப்பான்   நோக்க   இவை    நாணுத்தலைப்
பிரிந்தனவாகா என்பது என் கருத்து.