204பொருளியல்

வருவதோர் பண்பு. இதனைக்,
 

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற

(குறள்-1011)
 

என்னும்   பொய்யா   மொழியான்  அறிக. அவ்வாறே  மடம்  என்பதும்
அறியாமையாகிய  பண்பினைச்   சுட்டி  நின்றது.  கொளுத்தக்  கொண்டு
கொண்டது விடாமையாகிய  பெண்மைக் குணமாகிய 'மடம்' வேறு. இதுவே
றென அறிக. இதனை,
 

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு

(குறள்-89)
 

எனவும்,
 

நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

(குறள்-1297)
 

எனவும்
 

வருவனவற்றான்  அறிக.   இச்சூத்திரத்திற்கு  உரையாசியன்மார்   கூறும்
உரையும்  விளக்கமும்  இயைபின்றியும்  கூறியது   கூறலாயும்  உள்ளமை
அறிக.
 

சூ. 203 :

வண்ணம் பசந்து புலம்புறு காலை

உணர்ந்தது போல உறுப்பினைக் கிளவி

புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே

(7)
 

க - து :

இது   "நோயும்   இன்பமும்"   என்னும்    சூத்திரத்தான்
எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:தலைவி   தன்மேனி  வனப்புத்திரிந்து  தனிப்படர்  உறும்
காலத்துத்   தனது    நிலையைத்   தனது    உறுப்பு     ஒவ்வொன்றும்
உணர்ந்துள்ளமைபோல அதற்குப் பொருந்திய வகையாற் புனைந்து கூறவும்
பெறும்.
 

எ - டு :

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்

[குறள்-1233]
 

நாணில மன்றஎம் கண்ணே நாண்நேர்பு

சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்பு அன்ன

கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ

நுண்ணுறை அழிதுளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே

(குறு-35)
 

"புணர்ந்த வகையான்" என்றதனான்  அவை செயற்படுவன போலக் கூறலும்
கொள்க.
 

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்

தின்னும் அவர்க்காண லுற்று

(குறள்-1244)
 
எனவரும்.