பொருளியல்205

உம்மையான் உறுப்பொடு தொடர்புடையவற்றைக் கூறலும் கொள்க.
 

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை
(குறள்-1277)
 
எனவரும்.
 
சூ. 204 :

உடம்பும் உயிரும் வாடியக் காலும்

என்னுற் றனகொல் இவையெனின் அல்லதை

கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை

(8)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :தன்மேனியும் ஐம்புலத்துணர்வும் தேய்ந்து மெலிவுற்றபோதும்
இவை  உற்றதுயர்  என்கொல்?  என  அவற்றிற்கு  இரங்குவாள்  போலக்
கூறினல்லது  தலைவன்  உறையும்  இடம்  நாடிச்செல்லுதல்  தலைவிக்குப்
புலனெறி வழக்கு ஆமாறில்லை.
 

எ - டு :

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து

(குறள்-1173)
 

எனவரும்
 

ஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

(குறள்-1176)
 

என்பன இதன்பாற்படும்.
 

சூ. 205 :

ஒருசிறை நெஞ்சமொ டுசாவுங் காலை

உரிய தாகலும் உண்டென மொழிப

(9)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :ஒருமருங்கு தலைவி தன் நெஞ்சத்தொடு வினவி உரைக்குங்
காலத்து,  மேல்,  இல்லை  எனப்பட்ட கிழவோன் உறையுமிடஞ் சேர்தல்
உரியதாகலும் உண்டு என்று கூறுவர் புலவர்.
 

ஒரு   சிறை   = ஒரு   கூறு.  என்றது  செயற்படுதலின்றிக் கூற்றாக
நிகழுமிடத்து என்றவாறு.
 

எ - டு :

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்

பாடில கலுழும் கண்ணொடு புலம்பி

ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே

எழுஇனி வாழியென் நெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்